செவ்வாய், 1 ஜனவரி, 2013

இருளும் ஒளியும்-காரஞ்சன்(சேஷ்)


இருள்  விலக்கும் ஆண்டாய் இருந்திடு புத்தாண்டே!

ஒருபுறம் ஒளியும்
மறுபுறம் இருளுமாய்
உலகம் இருப்பதை
உரைக்குதோ உன்முகம்!
ஒளிவெள்ளம் பெருகிவர
ஒளியாத இருளுண்டோ?

எத்தகைய தடைவரினும்
ஏற்றுநீ எதிர்கொள்வாய்!
 எண்ணையும் திரியும்
இணைந்தெரிந்து இருள்நீக்க
காலத்தே ஏற்றிடு நீ
கல்வியெனும் நல்விளக்கை!

  
உன்போல் அறிவொளிகள்
உலகெங்கும் உதித்திட்டால்
கல்லாமை இருளெங்கும்
சொல்லாமல் அகலாதோ?
-காரஞ்சன்(சேஷ்)    

பட உதவி: கூகிளுக்கு நன்றி!
வலைச்சரத்தில் பகிர்ந்த என்னுடைய கவிதை! 

16 கருத்துகள்:

  1. 100 and innings is on and on

    All the best

    Keep kirukkifying and all are good

    பதிலளிநீக்கு
  2. ஒளிவெள்ளம் பெருகிவர
    ஒளியாத இருளுண்டோ?

    ஒளி நிறைந்த இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  3. angum vaasiththen!

    ingum vaasiththen!

    irandilum rasiththen...

    பதிலளிநீக்கு
  4. காலத்தே ஏற்றிடு நீ
    கல்வியெனும் நல்விளக்கை!//
    ஆம் உண்மை.
    காலம் பொன்னானது, கல்வி கண் போன்றது.

    பதிலளிநீக்கு
  5. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  6. முதல் நான்கு வரிகள் மனம் கவர்ந்தன...வாழ்த்துக்கள்...நன்றி.

    பதிலளிநீக்கு
  7. கல்லாமை இருளெங்கும்
    சொல்லாமல் அகலாதோ?

    அழுத்தமா சொன்னீங்க.

    பதிலளிநீக்கு
  8. ''..ஒருபுறம் ஒளியும்
    மறுபுறம் இருளுமாய்
    உலகம் இருப்பதை
    உரைக்குதோ உன்முகம்!..''
    Happy 2013.
    சகோதரா. இனிய புது வருட வாழ்த்து.
    வாருங்களேன் என் பக்கம்! என்ன தயக்கம்!
    நல்வரவு கூறுகிறேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  9. அவசியம் வருகிறேன்! தங்களின் வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  10. அழுத்தமான வரிகளில் அருமையா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. கல்லாமை அகலட்டும்.....

    புத்தாண்டு நல்வாழ்த்துகள் நண்பரே.....

    பதிலளிநீக்கு
  12. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  13. //
    உன்போல் அறிவொளிகள்
    உலகெங்கும் உதித்திட்டால்
    கல்லாமை இருளெங்கும்
    சொல்லாமல் அகலாதோ?//

    அருமையான அசத்தலான வரிகள். ;)

    பதிலளிநீக்கு