புதன், 13 மார்ச், 2013

படித்ததில் பிடித்தது!- அந்த நாளும் வந்திடாதோ?-காரஞ்சன்(சேஷ்)

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும்
கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே!
WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF

தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள்
நாம் தான்!
எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.
சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான்.  ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான். நெட் நண்பர்களிடம் இல்லை.
தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .
மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர்.
அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல
அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.


· எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

· வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

· எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

· உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை· நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம்.

· இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்
மின்னஞ்சல் அனுப்பிய நண்பருக்கு நன்றி!
 


12 கருத்துகள்:

  1. காலங்கள் மாறினாலும் ஒப்பிடும் உணர்வு என்றும் மாறாது. பாவம் மனிதர்கள்

    --எழிலி

    பதிலளிநீக்கு
  2. அன்று அளவோடு எல்லாம் இருந்தது... இப்போது எல்லாமுமே, எதற்குமே அளவில்லை... முக்கியமாக ஆசைக்கும்...

    இனி குழந்தைகளின் வருங்காலத்தை சிந்திப்போம்...

    பதிலளிநீக்கு
  3. இந்த கட்டுரையை நானும் வாசித்துள்ளேன்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! கருத்துரைக்கு நன்றி!

      நீக்கு
  4. கட்டுரை ஏற்கனவே வாசித்தாலும் மறுபடி வாசித்து பழைய காலங்களை அசைபோடுது மனது.

    காலம் மாறுது, அந்த நாளும் வந்திடாதோ என்று உள்ளம் ஏங்கத்தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  5. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! கருத்துரைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. தாங்கள் குறிப்பிட்ட கால கட்டத்திற்கு இரண்டு வருடங்கள் தள்ளிப் பிறந்தாலும், அனைத்துமே எனக்கும் ஒத்துப் போனது...:)

    நாம் அதிர்ஷ்டசாலிகளே....அந்த நாளும் வந்திடாதோ!

    பதிலளிநீக்கு
  7. தங்களின் வருகை மகிழ்வளித்தது! கருத்துரைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. //உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை· நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம்.//

    மிகவும் அருமையான கட்டுரை. ஏனோ படிக்கத்தவறியுள்ளேன். இப்போது தான் படிக்க நேர்ந்தது. தாங்கள் சொல்வது எல்லாமே உண்மை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. தங்களின் வருகை மகிழ்வளித்தது ஐயா! நன்றி!

    பதிலளிநீக்கு