பொங்கலோ பொங்கல்!
புவிவாழ மேழிதனை
புயமேந்தும் உழவர்கள்
தவிக்கின்றார் துயரினிலே
செவிமடுப்போம் துயர்களைய!
தீயினில் தூசாக
தீமைகள் மறையட்டும்!
போயின துயரென்று
போகியில் துவங்கிடுவோம்!
பகலவன் வரவாலே
பனிவிலகல் போலிங்கு
இனிவரும் நாளெல்லாம்
இன்பங்கள் பெருகட்டும்!
நீருண்ட மேகங்கள்
வேருண்ண நீர்தந்து
விளைச்சலைப் பெருக்கி -மன
உளைச்சலைப் போக்கட்டும்!
செந்நெல் பெருகி
மங்கல மஞ்சளொடு
பொங்கட்டும் மகிழ்வெங்கும்
பொங்கலோ பொங்கலென!
இனிவரும் நாளெல்லாம்
இன்பம் பெருகவென்று
திளைத்திடுவோம் மகிழ்வினிலே
தித்திக்கும் பொங்கலுடன்!
துன்பமும் துயரமும்
தொலையட்டும் இந்நாளில்!
மங்கல ஒலியெழுப்பி
மகிழ்ந்திருப்போம் அனைவருமே!
வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
இனிய தமிழர் தின நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!
நீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.....
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே!
நீக்குநான்கு கால் செல்வங்களுக்கு
பதிலளிநீக்குநம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
தைப்பொங்கல் வாழ்த்துகள்!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!
நீக்கு