பொங்குக பொங்கல்!
பொங்கும் மகிழ்வுடனே
உழவு உயர்வடைந்து
உலகில் தழைக்கட்டும்!
விளைபயிர்கள் உரிய
விலைமதிப்பை அடையட்டும்!
பொங்கும் மகிழ்வுடனே
பொங்கிடுக பொங்கல்!
மங்கலத் திருநாளாம்
மகிழ்வளிக்கும் பொங்கல்!
கதிரால் கதிர்விளைக்கும்
கதிரவனின் கருணைக்கு
நற்பொங்கல் நாம்படைத்து
நன்றிசொல்லும் நாளான்றோ?
மாக்கோல ஒவியமும்
மாவிலைத் தோரணமும்
மங்கலத்தின் குறியீடாய்
மங்கலத்தின் குறியீடாய்
எங்கும் நிறைந்திருக்கும்!
செங்கற்கள் அடுப்பாக
செங்கரும்பு அலங்கரிக்க
புதுப்பானை பொங்கலிட
புதுமஞ்சள் மாலையுடன்!
பொங்கிவரும் பாலில்
புத்தரிசி, வெல்லமிட்டு
"பொங்கலோ பொங்கல்" என
மங்கலக் குரலெழுப்பி
மகிழ்ச்சியில் ஆழ்ந்திடுவோம்!
பொங்கிவரும் பாலில்
புத்தரிசி, வெல்லமிட்டு
"பொங்கலோ பொங்கல்" என
மங்கலக் குரலெழுப்பி
மகிழ்ச்சியில் ஆழ்ந்திடுவோம்!
உழவு உயர்வடைந்து
உலகில் தழைக்கட்டும்!
விளைபயிர்கள் உரிய
விலைமதிப்பை அடையட்டும்!
பொய்யாது வானொழுகி
புவிவளம் பெருக்கட்டும்!
கைவிரிக்கும் காவிரியும்
கரைபுரள பெருகட்டும்!
பொங்கிவரும் காவிரியால்
பொங்கல் இனி சிறக்கட்டும்!
கல்லறுத்த விளைநிலங்கள்
நற்பயிரால் தழைக்கட்டும்!
புவிவளம் பெருக்கட்டும்!
கைவிரிக்கும் காவிரியும்
கரைபுரள பெருகட்டும்!
பொங்கிவரும் காவிரியால்
பொங்கல் இனி சிறக்கட்டும்!
கல்லறுத்த விளைநிலங்கள்
நற்பயிரால் தழைக்கட்டும்!
நம்பிக்கை மெய்யாகி
நற்பயன்கள் நல்கட்டும்!
இனிவரும் நாளெல்லாம்
இன்பமாய் அமையட்டும்!
பொங்கலோ பொங்கல்!
பொங்குக பொங்கல்!
-காரஞ்சன்(சேஷ்)
பொங்குக பொங்கல்!
-காரஞ்சன்(சேஷ்)
பொங்கல் கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க. உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களின் உடனடி வருகை மிக்க மகிழ்வளிக்கிறது! நன்றி! வாழ்த்திற்கு நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநம்பிக்கை மெய்யாகி
பதிலளிநீக்குநற்பயன்கள் நல்கட்டும்!
இனிவரும் நாளெல்லாம்
இன்பமாய் அமையட்டும்!
பொங்கலோ பொங்கல்!
பொங்குக பொங்கல்!//
இனி வரும் நாளெல்லாம் இன்பமாய் அமைய வாழ்த்தும் உங்கள் கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.
தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது! தங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! நன்றி!
நீக்குபொங்கல் கவிதை நன்று.
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
நன்றி நண்பரே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
நீக்குஇனிவரும் நாளெல்லாம்
பதிலளிநீக்குஇன்பமாய் அமையட்டும்!
பொங்கலோ பொங்கல்!
பொங்குக பொங்கல்!
தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது!தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!
நீக்குவரைந்துள்ள கோலமும் கவிதையும் அழகோ அழகு தான்.
பதிலளிநீக்கு//இனிவரும் நாளெல்லாம்
இன்பமாய் அமையட்டும்!
பொங்கலோ பொங்கல்!
பொங்குக பொங்கல்!//
தங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் இடம் பெற்றுள்ள அனைவருக்கும் என் அன்பான இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
அன்புடன்
VGK
தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது! தங்களின் வாழ்த்திற்கு நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! நன்றி ஐயா!
பதிலளிநீக்குபொங்கல் நன்னாளில் நல்ல சிந்தனைகளை விதைத்துள்ளீர்கள்.அது வளர்ந்து பூத்து காய்த்து குலுங்கட்டும் அந்த ஆதவன் அருளினால். .
பதிலளிநீக்குதங்களின் வருகை மகிழ்வளிக்கிறது!தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! நன்றி ஐயா!
நீக்குஎனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களின் வருகை மகிழ்வளிக்கிறது!தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களின் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! நன்றி ஐயா!
பதிலளிநீக்குmay god bless you and your family as you written
பதிலளிநீக்குanthuvan cuddalore
Thank You!
பதிலளிநீக்குஇந்த அருமையான் பொங்கல் கவிதை இன்றைய வலைச்சரத்தில்.
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.in/2013/12/blog-post_28.html#comment-form வாழ்த்துக்கள்.
தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தகவலுக்கு மிக்க நன்றி ஐயா!
நீக்கு