அங்கீகாரம் பெற
சங்கங்களிடையே போட்டி!
வெற்றி யாருக்கு?
விடையறியக் காத்திருப்பு!
தேர்தல் முடிவுகள்
அறிவிக்கும் வேளையில்
அணிவகுத்து ஆர்ப்பரிப்பு!
அலுவலக வாயிலில்
அருகருகே அமைந்தன
சங்கங்களின் கொடிமரங்கள்!
காற்றின் திசைக்கேற்ப
கைகுலுக்கிக் கொண்டிருந்தன
எதிரெதிர் அணிகளின் கொடிகள்!
-காரஞ்சன்(சேஷ்)
அருமை... அவை தான் கைகுலுக்கிக் கொள்ள வாய்ப்புண்டு...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!
நீக்குஅருமை....
பதிலளிநீக்குஎதிரெதிர் அணிகளாக இருந்தாலும் நாளை ஒரே பக்கம் இருக்கவும் வாய்ப்பு உண்டு எனச் சொல்லாமல் சொல்கிறதோ கொடிகள்....
உண்மைதான் நண்பரே! தங்களின் வருகைக்கு நன்றி!
பதிலளிநீக்குஅழுத்தமான படைப்பு
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
பதிலளிநீக்கு//காற்றின் திசைக்கேற்ப
பதிலளிநீக்குகைகுலுக்கிக் கொண்டிருந்தன
எதிரெதிர் அணிகளின் கொடிகள்!//
அருமையான வரிகள். பாராட்டுக்கள்.
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா!
பதிலளிநீக்குnantru...!
பதிலளிநீக்குnanri
நீக்குbeautiful sesh
பதிலளிநீக்குanthuvan cuddalore