புதன், 1 மே, 2013

உழைப்பவர்க்கு ஓருதினம்!-காரஞ்சன்(சேஷ்)




வேப்பம் பூவாசம்
வீதியெங்கும் நிறைந்திருக்க

கூவி அழைத்தெங்கும்
குயிலினங்கள் மகிழ்ந்திருக்க

பல்லுருவம் காட்டும்
படர்மேகத் திரைவிலக்கி

சிவந்த விழிகளொடு
செங்கதிரோன் உதித்திருக்க

இரைதேடப் புள்ளினங்கள்
இங்குமங்கும் பறந்திருக்க

ஒளிபிறந்த காலை
ஒளிகிறதே இருளிங்கு!

அலுவலகம் செல்பவர்கள்
இன்று விடுமுறைதான்
என்றெண்ணி உறங்கிடுவார்!

அன்றாடப் பிழைப்புக்கு
அங்குமிங்கும் அலைபவர்கள்
எந்நாளும் ஒன்றென்பார்!


உழைப்பவர்க்கு ஒருதினமாய்
உதித்ததன்றோ  மேதினம்!

உழைப்பாளி அனைவருக்கும்
உரைக்கின்றேன் என்வாழ்த்தை!


மேதின வாழ்த்துக்கள்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

24 கருத்துகள்:

  1. மே தின சிறப்புக் கவிதை வெகு சிறப்பு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  3. சிறப்பு கவிதைக்கு வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான வரிகள்...

    என்றும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  6. இனிய உழைப்பாளர் தினம் வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி! தங்களுக்கும் என் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!

      நீக்கு
  7. தொழிலாளிகள் தின நல்வாழ்த்துகள். கவிதை அருமையாக உள்ளது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  9. மே தினச் சிறப்புக் கவிதை மிக நன்று.....

    வாழ்த்துகள் சேஷ்.

    பதிலளிநீக்கு
  10. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  11. உழைப்பாளி அனைவருக்கும்
    உரைக்கின்றேன் என்வாழ்த்தை!

    சிறப்பான பகிர்வுகளுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  12. ததங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  13. அன்றாடங்காய்ச்சிகளுக்கும் அன்றன்று இரைதேடியுண்ணும் உயிர்களுக்கும் உழைப்பாளர் தினமாவது... விடுமுறையாவது... என்று சிந்திக்கவைத்தக் கருத்தைப் பகிர்ந்த கவிதைக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு