வணக்கம் நண்பர்களே!
மரியாதைக்குரிய திரு. வை.கோபாலகிருஷ்ணன் (VGK) அவர்கள் நடத்தி
வரும் சிறுகதை விமர்சனப் போட்டியில் "தை வெள்ளிக்கிழமை" கதைக்கான
என் விமர்சனத்திற்கு மூன்றாம் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்வுடன்
தெரிவித்துக் கொள்கிறேன். திரு VGK அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!
தெரிவு செய்த நடுவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!
அவருடைய வலைப்பூவிலிருந்து தகவலை அப்படியே
பகிர்ந்துள்ளேன்! நன்றி!
மூன்றாம் பரிசினை
திரு. E.S. சேஷாத்ரி
அவர்கள்
மூன்றாம் பரிசினை வென்றுள்ள
திரு. சேஷாத்ரி அவர்களின் விமர்சனம்:
REFERENCE NUMBER: VGK 02
"தை வெள்ளிக்கிழமை" சிறுகதை விமர்சனம்,
இரண்டாம் தைவெள்ளியன்று வெளியிடப்பட்ட இரண்டாம் கதை “தை வெள்ளிக்கிழமை”.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். வெள்ளி என்றால் மங்கலம் என்று சொல்வார்கள். இந்த மங்கல நிகழ்வும் புதியதோர் வழி பிறக்கின்ற செயலும் இந்தக் கதையில் இணைந்து பரிணமிப்பது உவகையளிக்கின்றது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். வெள்ளி என்றால் மங்கலம் என்று சொல்வார்கள். இந்த மங்கல நிகழ்வும் புதியதோர் வழி பிறக்கின்ற செயலும் இந்தக் கதையில் இணைந்து பரிணமிப்பது உவகையளிக்கின்றது.
வேண்டாம் என்று ஒதுக்கப்படுகின்ற கல்லே கருவறையின் கடவுள் சிலையாக ஆவதுபோல, கருவைக் கலைக்க நினைத்த உள்ளம், பிறந்த பெண்குழந்தையை, தங்க விக்ரஹம், கெஞ்சினாலும் கிடைக்காது 5ஆம் பெண், தை வெள்ளியில் தோன்றிய மஹாலக்ஷ்மி, இவள் எங்களுக்கு வேண்டும்- எங்களுக்கே வேண்டும் என்ற மனமாற்றம் அவர்கள் வாழ்க்கைக்கோர் கலங்கரை விளக்கம்.
பிரசவமா? ஐந்தாவதா? பெண்ணா? என்று எண்ணும் சமுதாயத்தில் தைவெள்ளி- தங்க விக்ரஹம் கிடைக்காத ஒன்று என்று ஏற்றுக்கொள்ளும் அந்த மனம் வேறு எதையும் விரும்பாதது மகிழ்வளித்தது. அந்தக் குழந்தைக்கு ஈடாக எவ்வளவு தொகை கிடைத்தாலும் அல்லது வசதிகள் ஏற்பட்டாலும் இந்தக் குழந்தையை யாருக்கும் தரமாட்டோம் என்ற மன உறுதி தெய்வம் தந்த வரம் தான்.
அத்தகு பெற்றோர் அவனியில் பெருகுக என்று மனம் எக்களிக்கும் விதத்தில் படைத்துள்ள பாங்கு எண்ணி மகிழ்வது மட்டுமல்லாது அந்தப் பெற்றோரை பெரிதும் போற்றுவதுடன் மனிதாபிமானத்துடன் தாயின் ஆரோக்யத்தையும் குழந்தையின் நலத்தையும் பெற்றோர்களுடைய வளத்தையும் குழந்தையில்லா தம்பதியினருடைய வாட்டத்தையும் பல கோணங்களிலும் நன்கு சிந்தித்து தன்னுடைய மருத்துவத் தொண்டை பயனுள்ள சமுதாயத் தொண்டாக ஏற்று அனைத்துத் தரப்பினருக்கும் மிகுந்த மனநிறைவை கூட்டுகின்ற அந்த மருத்துவரை மருத்துவச் சமுதாயம் முன்மாதிரியாக ஏற்று அவரின் அடிச்சுவட்டில் தாமும் சேவை உணர்வோடு தொண்டாற்ற நல்லதோர் பக்குவத்தை பெற்றார்களானால் இந்தப் படைப்பினை ஆக்கியவர்களுக்கு ஒரு மனநிறைவு நிச்சயம் ஏற்படும் என்பதை அவர்களுடைய (வை.கோபாலகிருஷ்ணன்) நெஞ்சம் சொல்லாமல் சொல்லுகிறது.
சமயோசிதமான முடிவுகளையும், திருப்பங்களையும், வாக்குறுதிகளையும் செயல்படுத்த முடியாதபோது யாருக்கும் மனவருத்தம் ஏற்படாதபடி வெளிப்படுத்துகின்ற சாதுர்யமும் அந்த மருத்துவருடைய பெரும் பலமாக அமைந்திருக்கிறது. கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்றாலும் கிடைக்குமென்று நம்பியது வந்து சேரவில்லையென்றாலும் அதிலும் விட்டுக் கொடுக்கின்ற பரந்த உள்ளம் குழந்தையில்லா தம்பதியினரின் நீக்குபோக்குக்கு ஏற்ப மனதை சமநிலைப் படுத்திக்கொள்ளுகின்ற ஆற்றல் உண்மையிலேயே அரிதானது! அருமையானது! அபூர்வமானது!
மொத்தத்தில் கதைமாந்தர்கள் கால வெள்ளத்திற்கேற்ப மனப்பக்குவத்தை அமைத்துக் கொண்டிருப்பது கதாசிரியருடைய பரந்த மனப்பான்மையை அவர் எதிர்பார்க்கின்ற சமுதாயச் சூழலை, நெஞ்சத்திரையிலே ஓடவிட்டு சமுதாயத்தில் இடம் பொருள் காலம் இவற்றிற்கேற்ப தன்னைப் பக்குவப் படுத்திக் கொள்கின்ற பாங்கினை உணர்த்துகின்றது. இது ஒரு வாழ்க்கை நெறிமுறை விளக்கமாக அமைந்துள்ளது.
இந்தப் படைப்பு தாய்சேய் மருத்துவமனைகள் அனைத்திலும் கருத்து விளக்கமாக தக்க படங்களுடன் அமையுமானால் பேறுகாலப் பெண்டிரும் அவர்தம் கணவரும் மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்ட அனைவரும் மனசாட்சியோடு செயலாற்ற மனமகிழ்வோடு மனையறம் நடத்த ஒரு விளக்கமாக அமையும் என்று கருதுகிறேன்.
இந்த ஏற்றமான மாற்றம்தான் மகிழ்வூட்டும் வெற்றியாகும். மனநிறைவுதரும். இத்தகு உள்ளங்கள் மேலும் பெருகும். எதிர்பார்ப்போம். இத்தகு சிந்தனைகள் எல்லோரிடத்தும் முகிழ்க்குமானால் எங்கும் மகிழ்வு! என்றும் மகிழ்வு! யாவர்க்கும் மகிழ்வே!
உங்கள் எழுதுகோலுக்கு என் வணக்கம்! உங்கள் மன உணர்வுகளுக்கு எனது பாராட்டுக்கள்!
காரஞ்சன்(சேஷ்)
===$$$$$$$$$$$===========
congrats sesha
பதிலளிநீக்குanthuvan cuddalore
Thank you very much!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
வலையுலகில் தொடர் வெற்றிகள் ஈட்ட எனது வாழ்த்துக்கள் ஐயா....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கள் ஐயா...
பதிலளிநீக்குநன்றி ஐயா!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅருமையான விமர்சனம்.
இந்தப் படைப்பு தாய்சேய் மருத்துவமனைகள் அனைத்திலும் கருத்து விளக்கமாக தக்க படங்களுடன் அமையுமானால் பேறுகாலப் பெண்டிரும் அவர்தம் கணவரும் மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்ட அனைவரும் மனசாட்சியோடு செயலாற்ற மனமகிழ்வோடு மனையறம் நடத்த ஒரு விளக்கமாக அமையும் என்று கருதுகிறேன்.//
நல்ல ஆலோசனை..
தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
நீக்குஎன் மனம் நிறைந்த பாராட்டுக்கள் + வாழ்த்துகள். தங்களின் விமர்சனத்தை பரிசுக்குத் தேர்வு செய்துள்ள நடுவர் அவர்களுக்கும் என் நன்றிகள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ! வளரட்டும் உங்கள் புகழ்....!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி
பதிலளிநீக்குதங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் நண்பரே...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!
நீக்குCONGRATULATIONS SESHA!!!
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குCONGRATULATIONS SESHA!!!
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குவிமர்சனப் போட்டியில்" தை வெள்ளிக்கிழமை" கதைக்கான விமர்சனத்திற்குமூன்றாம் பரிசு கிடைத்துள்ளதற்கு
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!
பதிலளிநீக்குவாழ்த்துகள் சார்...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
பதிலளிநீக்குஅன்பின் சேஷாத்ரி - விமர்சனப் போட்டியில் பரிசு பெற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குதங்களின் வருகை மகிழ்வளித்தது ஐயா! தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...!
பதிலளிநீக்குமனம் நிறைந்த வாழ்த்துகள் சேஷாத்ரி.....
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே!
பதிலளிநீக்குஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தங்களின் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி ஐயா!
பதிலளிநீக்கு