செவ்வாய், 12 ஜூன், 2018

அகலட்டும் அல்லல்கள்!


                                           அகலட்டும் அல்லல்கள்!
கொளுத்தும் வெயிலுக்கு

வெளுத்த உடை!

தேர்காண வந்தோரின்

வேர்வை போக்கிட

விரிந்த கரங்களில்

விற்பதற்காய் விசிறிகள்!

அரங்கனின் பார்வைக்கு

அவர் விசிறி!

செய்யும் தொழிலதனை

தெய்வமாய் நினைப்பதால்

அரங்கனும் ஆவாரோ

அவரின் விசிறி?

கடைக்கண் பார்வைக்குக்

காத்திருக்கும் அவருக்கு

அரங்கன் அருளால்

அகலட்டும் அல்லல்கள்!

                       - காரஞ்சன்(சேஷ்),
            திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!

8 கருத்துகள்:

  1. //அரங்கன் அருளால்

    அகலட்டும் அல்லல்கள்!//

    உங்கள் வாக்குபடி விசிறி தொழிலாளிக்கு
    அரங்கன் அருள்புரியட்டும்.
    கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்ற்!

      நீக்கு
  2. அருமையான கவிதை மிகவும் நன்று வாழ்த்துகள்.
    - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்ற்!

      நீக்கு
  3. சிறப்பான கவிதை.

    சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கத்தில் ஒரு பதிவு. வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி!

      நீக்கு