உழுபவர் நிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உழுபவர் நிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 11 ஜனவரி, 2013

விதியின் கோடு!- காரஞ்சன்(சேஷ்)



                                      விதியின் கோடு!




ஆழ உழுததற்கு
அடையாள வரிகளாய்
அகன்ற நிலமெங்கும்
உழவின் கோடுகள்!
நிலத்தினில் சாட்சியாய்
நின்றிருக்கும் மரமே-நீ
இயற்கை அன்னையிடம்
எங்கள் நிலை கூறாயோ?
எழுதும் விதிக்கரங்கள்
இரக்கம் கொள்ளாதோ?
உழுபவர் நிலைஉயர
ஒருகோடு வரையாதோ?   
                           -காரஞ்சன்(சேஷ்) 
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
வலைச்சரத்தில் பகிர்ந்த என்னுடைய கவிதை.