பயன் தரும் பயணம் !
காரிருள் களைகிறது
கதிரவன் பயணம்!
பாய்ந்தோடும்
பாதையெங்கும்
பயன் விளைவிக்கும்
நதியின் பயணம்!
நிற்காமல் சுழலும்
நீள்புவியால்
பகலிரவும்
பருவங்களும்!
மனிதனே!
தோன்றியவுடன்
துவங்கிடுதே
நம் பயணம்!
இடைப்பட்ட நாட்களே
இருப்பாய் நம் கையில்!
கடந்த காலங்கள்
காட்டிய அனுபவத்தால்
தடைகளைத் தகர்த்து
எதிர்வரும் காலத்தில்
நன்மை பயப்பதாய்
நம்பயணம் அமையட்டும்!
-காரஞ்சன்(சேஷ்)
(பட உதவி: கூகிள்)
கருத்துள்ள கவி பயணம் ! நன்றி சார் ! வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குநன்றி ஐயா!
நீக்கு//இடைப்பட்ட நாட்களே
பதிலளிநீக்குஇருப்பாய் நம் கையில்!
தடைகளைத் தகர்ந்து
எதிர்வரும் காலத்தில்
நன்மை பயப்பதாய்
நம்பயணம் அமையட்டும்!//
அருமை. பாராட்டுக்கள்.
தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது! நன்றி ஐயா!
பதிலளிநீக்குகடந்த காலங்கள்
பதிலளிநீக்குகாட்டிய அனுபவத்தால்
தடைகளைத் தகர்த்து
எதிர்வரும் காலத்தில்
நன்மை பயப்பதாய்
நம்பயணம் அமையட்டும்!
இனிதே தொடர வாழ்த்துக்கள்.
நன்றி! நன்றி!
பதிலளிநீக்குநன்பரே. . .நீங்களும் ஒரு அமைதிக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறீர்கள் . . . சில எதிர்பாராத நிகழ்வுகள் இந்த அமைதிக்கு காரணம். புரிகிறது. . . அதன் தாக்கம் மொழிகளிலும், இடுகைகளிலும் தெரிகிறது. . . நானும் அந்த உணர்வுகளுடனே இந்த இடுகைகளை பார்க்கிறேன். சற்றே வலி குறைகிறது அல்லது குறைகிற மாதிரி ஒரு தோற்றம் . . நல்லவைகளையே எதிர் பார்ப்போம். அதற்கே பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குஉண்மைதான்! காலம் தான் மருந்தாக வேண்டும்!
நீக்குதங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
hii.. Nice Post
பதிலளிநீக்குThanks for sharing
For latest stills videos visit ..
More Entertainment
www.ChiCha.in
very impressive words god bless u more
பதிலளிநீக்குanthuvan cuddalore