நண்பர் எனக்கனுப்பிய மின் அஞ்சலைப் பகிர்ந்துள்ளேன்!
-காரஞ்சன்(சேஷ்)
இழந்ததெல்லாம் திரும்பத் தா
இறைவா!
இழந்ததெல்லாம் திரும்பத் தா எனக்கென்றேன்
இழந்த எவை என இறைவன் கேட்டான்!
பலவும் இழந்திருக்கிறேன் ,கணக்கில்லை
பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?
கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்
கோலம் மாறி என் அழகையும் இழந்தேன்
காதலித்து அவளிடம் இதயமிழந்தேன்
காணாமல் போனாளே அவளை இழந்தேன்
வயதாக ஆக உடல் நலமிழந்தேன்
எதை என்று சொல்வேன் நான்
இறைவன் கேட்கையில்?
எதையெல்லாம் இழந்தேனோ
இழந்ததெல்லாம் திரும்பத் தா எனக்கென்றேன்
இழந்த எவை என இறைவன் கேட்டான்!
பலவும் இழந்திருக்கிறேன் ,கணக்கில்லை
பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?
கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்
கோலம் மாறி என் அழகையும் இழந்தேன்
காதலித்து அவளிடம் இதயமிழந்தேன்
காணாமல் போனாளே அவளை இழந்தேன்
வயதாக ஆக உடல் நலமிழந்தேன்
எதை என்று சொல்வேன் நான்
இறைவன் கேட்கையில்?
எதையெல்லாம் இழந்தேனோ
அதையெல்லாம் மீண்டும்தா என்றேன்.
அழகாகச் சிரித்தான் பரமன்
”கல்வி கற்றதால் அறியாமை இழந்தாய்
உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்
நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்
சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல
தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்.
திகைத்தேன்!
இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்
வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறும்
இணைந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்
இறைவன் மறைந்தான்
அழகாகச் சிரித்தான் பரமன்
”கல்வி கற்றதால் அறியாமை இழந்தாய்
உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்
நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்
சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல
தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்.
திகைத்தேன்!
இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்
வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறும்
இணைந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்
இறைவன் மறைந்தான்
(நண்பருக்கு நன்றி!)
சிந்திக்க வைக்கும் மின் அஞ்சல்...
பதிலளிநீக்குஅனுப்பிய நண்பருக்கும், பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள் ! நன்றி சார் !
தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
நானும் சமீபத்தில் இதனை ஏதோ ஓர் வலைப்பதிவில் படித்தேன்.
பதிலளிநீக்குமிகவும் சிந்திக்க வைத்த விஷயம் தான். பகிர்வுக்கு நன்றி.
தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
அருமையான சிந்தனை :-)
பதிலளிநீக்குதங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
அருமையான படைப்பு
பதிலளிநீக்குஅதனைப் பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
அருமையான பகிர்வு...
பதிலளிநீக்குநல்ல சிந்தனையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.
தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
சிந்திக்க வைக்கும் பகிர்வு .
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி!
நீக்கு-காரஞ்சன்(சேஷ்)
you have shared very useful messages thanks payanam kavithai is a very gud one keep it up
பதிலளிநீக்குanthuvan cuddalore
சிந்திக்கவைக்கும் சிறப்பான பகிர்வுகள்..
பதிலளிநீக்கு