வியாழன், 21 ஜூன், 2012

பிடித்த மின் அஞ்சல்!

 
நண்பர் எனக்கனுப்பிய மின் அஞ்சலைப் பகிர்ந்துள்ளேன்!
-காரஞ்சன்(சேஷ்)
 
இழந்ததெல்லாம் திரும்பத் தா இறைவா!
இழந்ததெல்லாம் திரும்பத் தா எனக்கென்றேன்
இழந்த எவை என இறைவன் கேட்டான்!

பலவும் இழந்திருக்கிறேன் ,கணக்கில்லை
பட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்?
கால மாற்றத்தில் இளமையை இழந்தேன்
கோலம் மாறி என் அழகையும் இழந்தேன்
காதலித்து அவளிடம் இதயமிழந்தேன்
காணாமல் போனாளே அவளை இழந்தேன்
வயதாக ஆக உடல் நலமிழந்தேன்
எதை என்று சொல்வேன் நான்
இறைவன் கேட்கையில்?
எதையெல்லாம் இழந்தேனோ
அதையெல்லாம் மீண்டும்தா என்றேன்.

அழகாகச் சிரித்தான் பரமன்

கல்வி கற்றதால் அறியாமை
இழந்தாய்
உழைப்பின் பயனாய் வறுமையை இழந்தாய்
நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய்
சொல்ல இன்னும் பல உண்டு இதுபோல
தரட்டுமா அனைத்தையும் திரும்ப என்றான்.


திகைத்தேன்!
இழப்பின் மறுபக்கம் எதுவென்று உணர்ந்தேன்
வாழ்க்கையின் ஓட்டத்தில் இழப்பும் பேறும்
இணைந்ததை அறிந்தேன் இதயம் தெளிந்தேன்
இறைவன் மறைந்தான்

(நண்பருக்கு நன்றி!)

14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  2. நானும் சமீபத்தில் இதனை ஏதோ ஓர் வலைப்பதிவில் படித்தேன்.
    மிகவும் சிந்திக்க வைத்த விஷயம் தான். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  4. அருமையான படைப்பு
    அதனைப் பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  5. அருமையான பகிர்வு...

    நல்ல சிந்தனையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  6. சிந்திக்க வைக்கும் பகிர்வு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  7. you have shared very useful messages thanks payanam kavithai is a very gud one keep it up

    anthuvan cuddalore

    பதிலளிநீக்கு
  8. சிந்திக்கவைக்கும் சிறப்பான பகிர்வுகள்..

    பதிலளிநீக்கு