வெள்ளி, 11 மே, 2012

என்ன பார்வை உந்தன் பார்வை?- காரஞ்சன்(சேஷ்)

                                                என்ன பார்வை உந்தன் பார்வை?

முதுமை உடல்முழுதும்  முத்திரை பதித்தாலும்,
உழைக்கும்  எண்ணமது உதிரத்தில் ஊறியதால்
  நோக்கில் தெளிவோடு சாக்கில் கடைவிரித்தாய்!
          தேவைக்குப் பொருளீட்டத் தெருவோரம் கடைபோட்டு
       கொண்டுவந்த காய்கறியை கூறாக்கி வைத்துள்ளாய்!
ஆறு,குளம் வற்றிடலாம்! ஆழ்மனதில் ஈரமுண்டு!
           ஏரெடுத்துப் பிழைப்பவரை ஏறெடுத்துப் பார்க்கும்நிலை
  எப்போது வருமெனவே ஏங்கிடுதோ உன்பார்வை!
பார்க்கத் தெரிந்தால்தான் பாதை தெரியுமென
       நோக்கின்றித் திரிவோர்க்கு நுவலாதோ உம்வாழ்வு?
                                                                               -காரஞ்சன்(சேஷ்)

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  2. நெஞ்சம் கணக்கும் படைப்பு .. உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பார்வை பற்றிய நல்லதோர் பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் பாராட்டும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  4. வயது முதிர்ந்தாலும் வாழ்நாளை கடக்க வேண்டுமே வலி மிகும் வரிகள் அருமை .

    பதிலளிநீக்கு
  5. தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு