புதன், 2 மே, 2012

கனவு மெய்ப்படவேண்டும் -காரஞ்சன்(சேஷ்)

சுழலும் உலகத்துக்கு
உழவுதாங்க அச்சாணி!

உழவன் படுந்துயரம்
உலகம் அறியலையோ?

வறுமை அவன் வாழ்வை
வட்டமிட்டுத் தாக்குதுங்க!

மாறிவரும் பட்டியலில்
மாரியும் சேர்ந்திடுச்சு!

மும்மாரி பொழிஞ்சு
முப்போகம் விளைஞ்சகதை
எப்போதோ மாறிடிச்சு!
ஏத்தம், கவலையெலாம்
எந்திரமா மாறிடிச்சு!

ஊருக்கு நீர்சேர்க்க
உண்டியலாய்க் குளமிருக்கும்!

ஏரி குளமெல்லாம்
எப்போதோ வீடாச்சு!
நீர்வளம் குறைஞ்சு
நிற்கதியாய் நின்றாச்சு!

ஆழத் துளையிட்டு
அடிநீரை இறைத்ததனால்
கடல்நீர் உட்புகுந்து
களர் நிலமாயிடிச்சு!

சம்சாரம் இல்லேன்னா
சமாளிச்சு வாழ்ந்திடலாம்!
மின்சாரம் இல்லேன்னா
மிகக் கொடுமை ஆகுதிங்கே!

கால்நடை வளர்த்தோம்
கழிவெல்லாம் உரமாச்சு!
தழையுரமும் புண்ணாக்கும்
தந்ததையா மகசூலை!

தோட்டத்துக் காய்பறிச்சு
தொட்டுக்க கறிசமைச்சா
தூக்குமய்யா வாசம்
தூண்டிவிடும் எம்பசியை!

மாத்திரை மருந்தநம்பி
மனுஷ வாழ்விருக்கு!

வேதி உரமும்
வீரிய மருந்துகளும்
நிலத்தைக் கெடுத்து
நீர்குடிக்கச் செய்திடுச்சு!

விளையும் பயிர்மூலம்
வெவ்வேறு நோய்வருது!

விளைநிலத்தை யெல்லாம்
வீடாக்க வித்துப்புட்டா
கட்டிடங்கள் வந்து
கடும்பசிக்குச் சோறிடுமா?

உற்பத்தி செய்பவனோ
உழலுகிறான் வறுமையிலே
வாங்கி விற்பவனோ
வளமாய் வாழுகின்றான்!

செயற்கைக்கோள் செய்ஞ்சி
செலுத்துறாங்க வானத்தில்!
இயற்கை அழிவதையே
ஏன் தடுத்து நிறுத்தலையோ?


உழைக்காம பிழைத்திடவே
உலகம் விரும்புதப்பா!
உழைத்து வாழ்பவரை
பிழைக்கத் தெரியாதவன்னு
பேர்வைச்சு சிரிக்குதப்பா!

அளவோடு விஞ்ஞானம்
அனுபவமும் சேர்ந்து
விழைந்து முன்வந்து
விவசாய்ம் செய்யவந்தா
தழைச்சு பயிர்வளரும்
தரணியெலாம் மனங்குளிரும்!
காலம் முடியுமுன்னே
கண்குளிரப் பார்த்திடணும்!


கனவு நனவாக
காலமே துணைநில்லு!
பொழுது சாயுமுன்னே
புறப்படுறேன் வீட்டுக்கு!
          
                                                    -காரஞ்சன்(சேஷ்)

படத்திற்கு நன்றி: கீதமஞ்சரி அவர்களின் வலைப்பூ

43 கருத்துகள்:

 1. பெயரில்லா2 மே, 2012 அன்று PM 12:42

  மிக நன்றாக உள்ளது ஐயா!தொடரட்டும் உங்கள் கவிப்பணி!

  யாத்ரா

  பதிலளிநீக்கு
 2. உழைக்காம பிழைத்திடவே
  உலகம் விரும்புதப்பா!
  உழைத்து வாழ்பவரை
  பிழைக்கத் தெரியாதவன்னு
  பேர்வைச்சு சிரிக்குதப்பா!//

  அருமை. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டிற்கும் வருகைக்கும் நன்றி ஐயா!
   காரஞ்சன்(சேஷ்)

   நீக்கு
 3. விளைநிலத்தை யெல்லாம்
  வீடாக்க வித்துப்புட்டா
  கட்டிடங்கள் வந்து
  கடும்பசிக்குச் சோறிடுமா?// ஆதங்க வரிகள் உணரும் மக்கள் எங்கே ...

  பதிலளிநீக்கு
 4. பெயரில்லா2 மே, 2012 அன்று PM 2:34

  விளைநிலத்தை யெல்லாம்
  வீடாக்க வித்துப்புட்டா
  கட்டிடங்கள் வந்து
  கடும்பசிக்குச் சோறிடுமா?

  மிகவும் அருமை!

  -கஸ்தூரி பாலாஜி

  பதிலளிநீக்கு
 5. பாராட்டுக்குறிய கவிதை நண்பரே ...

  பணம் காய்க்கும் மரம் நட்டு
  பணம் மட்டுமே உயிரென்று
  ஊசலாடுது மக்கிப் போகும்
  சரீரம் பரிக்கு குழிக்குள் குழி.........

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. நீண்ட இடைவெளிக்குப்பின் தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது! நன்றி!
   -காரஞ்சன்(சேஷ்)

   நீக்கு
 7. பெயரில்லா2 மே, 2012 அன்று PM 8:05

  விளைநிலத்தை யெல்லாம்
  வீடாக்க வித்துப்புட்டா
  கட்டிடங்கள் வந்து
  கடும்பசிக்குச் சோறிடுமா?.. fantastic

  Shanmugasundaram Ellappan

  பதிலளிநீக்கு
 8. நல்ல கவிதை சேஷாத்ரி. படம் வைத்து நீங்கள் படைத்த கவிதை அருமை... பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 9. அன்பின் நண்பருக்கு வணக்கம்
  முதலில் உங்களின் சிந்தனையுடன் ஒன்றி போனவன் என்ற முறையில் சந்தோஷம் அடைந்து கொள்கிறேன் ..

  இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசரதேவையான செய்தியினை உறக்கசொல்கிறது
  உங்களின் அழகிய படைப்பு ...
  ஒவ்வொரு வரிகளும் உள்ளதை சுடு கம்பியால் சுட்டுசெல்கிறது ..
  அவ்வளவு நேர்த்தி துல்லியம் ... உங்களின் இந்த படைப்புக்கு என் நெஞ்சம் கசியும் வாழ்த்துக்களும் வணக்கங்களும் ...
  - அரசன்

  பதிலளிநீக்கு
 10. இன்றைய காலகட்டத்தில் முக்கியத்துவமான செய்தி என்பது உண்மதான்!

  தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் என் உளமார்ந்த நன்றி!

  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 11. சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்ற நிலை போய், சுழலில் சிக்கிய படகாய்த் தத்தளிக்கும் அவர் நிலை மாறவேண்டும். கனவு மெய்ப்பட வேண்டும். மனத்தை வருத்திப்போகும் நேயமற்ற நிகழ்வுகளை மனவெளியில் விதைத்துவிட்ட கவிதைக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 12. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் என் உளமார்ந்த நன்றி!

  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 13. நம் நாட்டின் கேந்திர தொழிலான விவசாயம் கிட்டதட்ட தன் மூச்சைநிறுத்திவிட்ட நிலையில்/அதற்கு மாற்று ஏற்பாடாக ஏதும் யோசிக்காத வரையில் இப்படி கவிதைகளில்தான் விவசாயி வாழ்ந்து கொண்டிருப்பான்.

  பதிலளிநீக்கு
 14. உழவர் வாழ்வு உயர்நிலையடைய விழைந்த கனவு விரைவில் மெய்ப்பட வேண்டிநிற்போம்!
  தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி!

  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
 15. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 16. தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு நட்போடு அழைக்கிறேன் .

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் ஐயா..

  மீண்டும் உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

  வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_13.html) சென்று பார்க்கவும். நன்றி !

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் சொந்தமே!வலைச்சர அறிமகத்தில் தங்கள் தளம் கண்டேன்.உண்மையில் அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள் சொந்தமே!சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 19. அழகான கவிதை... அருமையான வரிகள்.. வலைசாரம் மூலம் உங்கள் தளத்திற்கு பயணமானேன்... என் வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறேன்... "பாதை மாறும் பயணம்" கட்டுரை படித்து கருத்துரைக்கவும்... நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி! தங்களின் வலைத்தளத்திற்கு வ்ந்து கருத்த்டுரையிடுகிறேன்

   நீக்கு
 20. அன்பின் காரஞ்சன்(சேஷ்) - ஆதங்கத்துடன் எழுதப்பட்ட கவிதை - நன்று நன்று - நீளம் கொஞ்சம் அதிகமோ ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களின் கருத்துரை என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது! நன்றி!

   நீக்கு
 21. உற்பத்தி செய்பவனோ
  உழலுகிறான் வறுமையிலே
  வாங்கி விற்பவனோ
  வளமாய் வாழுகின்றான்!


  அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி! தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்!

   நீக்கு
 22. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
  வலைச்சரம் மூலம் என் முதல் வருகை!

  இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
  http://thalirssb.blogspot.in/2012/08/4.html
  டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html

  பதிலளிநீக்கு
 23. //அளவோடு விஞ்ஞானம்
  அனுபவமும் சேர்ந்து
  விழைந்து முன்வந்து
  விவசாய்ம் செய்யவந்தா
  தழைச்சு பயிர்வளரும்
  தரணியெலாம் மனங்குளிரும்!
  காலம் முடியுமுன்னே
  கண்குளிரப் பார்த்திடணும்//

  வலைசரம் பார்த்துவிட்டு வந்தேன்.
  நல்ல வரிகள் நல்ல கவிதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளிக்கிறது! நன்றி ஐயா!

   நீக்கு
 24. விளைநிலத்தை யெல்லாம்
  வீடாக்க வித்துப்புட்டா
  கட்டிடங்கள் வந்து
  கடும்பசிக்குச் சோறிடுமா?//


  விளை நிலத்தை வித்தவருக்கும், வாங்கியவருக்கும் எல்லோருக்கும் இதே கதிதான்.
  மனிதன் விழித்துக் கொண்டால் சரி.
  அருமையான கருந்த்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன்! வருகைக்கு நன்றி!

   நீக்கு