செவ்வாய், 24 ஜூலை, 2012

மட்பா(ண்)டம்!




மட்பா(ண்)டம்!


பாங்கான மண்ணெடுத்து
பக்குவமாய்ப் பிசைந்து
சக்கரத்தில் ஏற்றி
சரியாக வடிவமைத்து
தட்டிக் கொடுத்து
தரைமீது உலர்த்தி
சுட்டெடுத்த பின்னர்தான்
மட்பாண்டம்- எண்ணம்போல்!

உருவான பாண்டங்கள்
உடைந்திட சாத்தியமுண்டு!
உடைத்திட சாத்திரமுண்டு!
உடைப்பதும், உடைவதும்
படைத்தலுக்கு அடித்தளமே!

பட்டபின்னர் மனம்
பக்குவப்படுதல்போல்
சுட்டபின் மட்பாண்டம்
சுடுநீரைக் குளிர்விக்கும்!

உருவாக்கும் கைகளில்
உருப்பெறுமே களிமண்ணும்!
வளர்ப்பு முறையினிலே
வாழ்வின் வடிவமையும்!
பச்சிளம் பருவத்தை
பயனுள்ள பாத்திரமாய்
வடிப்பது நம்கையில்!


வாழ்க்கைச் சக்கரத்தில்
வடிவெடுக்கும் பாத்திரங்கள்
பயன் தரும் பாத்திரமாய்
பல்லாண்டு வாழ்கவென
பாடம் சொல்கிறதோ
பாரினில் மட்பா(ண்)டம்!


-காரஞ்சன்(சேஷ்)


பட உதவி:: நன்றி-கூகிள்

16 கருத்துகள்:

  1. பட்டபின்னர் மனம்
    பக்குவப்படுதல்போல்
    சுட்டபின் மட்பாண்டம்
    சுடுநீரைக் குளிர்விக்கும்!

    அருமையான வரிகள் சார் ! வாழ்த்துக்கள்... நன்றி...
    தொடர்ந்து எழுதவும்...

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  3. மண் பாண்டக்கவிதை ஜில்லென்று அழகாகப் படைக்கப்பட்டுள்ளது. ;)

    பதிலளிநீக்கு
  4. அருமையான கருத்தை நச்சென்று கூறிச்சென்றது!

    பதிலளிநீக்கு
  5. நல்ல கருத்து கொண்ட நற்கவிதை....

    பகிர்வுக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  6. வாழ்க்கைச் சக்கரத்தில்
    வடிவெடுக்கும் பாத்திரங்கள்
    பயன் தரும் பாத்திரமாய்
    பல்லாண்டு வாழ்கவென
    பாடம் சொல்கிறதோ
    பாரினில் மட்பா(ண்)டம்!
    nallathoru kavithai!

    பதிலளிநீக்கு
  7. தங்களின் வருகையும் பாராட்டும் மகிழ்வளித்தது! நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  8. மட்பாண்டத்தின் மகிமையை அழகாக சொன்னீர்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு