சனி, 28 ஜூலை, 2012

உபதேசம்!

உபதேசம்!

                                                   கரும்புகையைக் கக்கியபடி
                                                   கடந்த வாகனத்தில்
                                                   கண்ணில் பட்ட வாசகம்
                                                   "சுற்றுச்சூழல் காப்போம்!"

ஓரமாய் நின்றிருந்த வேனில்
   ஓடிக்கொண்டிருந்தது என்ஜின்
எழுதியிருந்த வாசகமோ   
எரிபொருள் சிக்கனம்
தேவை இக்கணம்!


பிஞ்சுமனம்!

அழுகையை நிறுத்தியது
அடம்பிடித்த குழந்தை!
கடந்துபோன காரில்
கரடி  பொம்மைகள்!


                                                            
                                                       

9 கருத்துகள்:

 1. மூன்றிலுமே, யோசிக்க வைக்கும் அழகான அருமையான வரிகள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்தும் மகிழ்வளித்தது! நன்றி!-காரஞ்சன்(சேஷ்)

   நீக்கு
 3. halo . . . . very good
  again you are in full swing . . . .

  happy to note that ...

  third one is nice visual

  பதிலளிநீக்கு