வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

ஒத்த மாட்டு வண்டி!


ஒத்தமாட்டு வண்டி பூட்டி
ஊரைச்சுத்தி வாரவரே!
இரட்டைமாட்டு வண்டியாக்க
ஏன் இன்னும் முடியலயோ?

மனபாரம் சுமந்திடும்நான்
மாட்டுக்கு முன்பாரம்!
வாடகைக்கு வண்டியோட்டி
வாழ்க்கை நடந்திடுது!
வண்டிய நம்பி இங்கே
இரண்டு ஜீவன் பொழைப்பிருக்கு!
இன்னோரு ஜீவனுக்கு
இடங்கொடுக்க ஏது வழி?

பாரம் குறையணும்னா
பகிர்ந்து வாழ்ந்திடணும்!
ஒண்ணுசேர்ந்து உழைச்சா
ஒசந்திடலாம் வாழ்க்கையில!
ஒத்துக்க மனமிருந்தா
உன்துணையா நானிருப்பேன்!

ஒத்த மனசிருக்கும்
உன்னுடன் வாழ்வினிக்கும்!
இருவருமா சேர்ந்திழுப்போம்
இல்லற வண்டியினை!
பிழைக்க வழியிருக்க
பிழையாம வாழ்ந்திடலாம்!
பிறக்கும் பிள்ளைகள- நம்
பேர்சொல்ல வளர்த்திடலாம்!

காரஞ்சன்(சேஷ்)

(பட உதவி: கூகிள்)
13 கருத்துகள்:

 1. கருத்துள்ள வரிகள் ஐயா...

  மிகவும் பிடித்த வரிகள் :

  /// பாரம் குறையணும்னா
  பகிர்ந்து வாழ்ந்திடணும்!
  ஒண்ணுசேர்ந்து உழைச்சா
  ஒசந்திடலாம் வாழ்க்கையில! //

  வாழ்த்துக்கள்.... நன்றி...

  பதிலளிநீக்கு
 2. நன்றி! நன்றி! தங்களின் வருகை மகிழ்வளித்தது!

  பதிலளிநீக்கு
 3. //ஒத்த மனசிருக்கும்
  உன்னுடன் வாழ்வினிக்கும்!
  இருவருமா சேர்ந்திழுப்போம்
  இல்லற வண்டியினை!// ;)

  அழகான கவிதைக்கு பாராட்டுக்கள்.
  அன்புடன்
  vgk

  பதிலளிநீக்கு
 4. ///
  பாரம் குறையணும்னா
  பகிர்ந்து வாழ்ந்திடணும்!
  ஒண்ணுசேர்ந்து உழைச்சா
  ஒசந்திடலாம் வாழ்க்கையில!
  //

  கலக்கலான வரிகள்!

  பதிலளிநீக்கு
 5. வருகைபுரிந்து வலைச்சரத்தில் என் பதிவை அறிமுகப்படுத்திய நண்பருக்கு என் உளமார்ந்த நன்றி! முடிந்தால் பிற பதிவுகளைப் படித்து கருத்துரையிட வேண்டுகிறேன்!

  பதிலளிநீக்கு
 6. // பாரம் குறையணும்னா
  பகிர்ந்து வாழ்ந்திடணும்!
  ஒண்ணுசேர்ந்து உழைச்சா
  ஒசந்திடலாம் வாழ்க்கையில!
  ஒத்துக்க மனமிருந்தா
  உன்துணையா நானிருப்பேன்! // பொருள் பதிந்த வரிகள். அழகான வரிகள்.தொடருங்கள் நண்பரே

  பதிலளிநீக்கு