ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

பட்டாம்பூச்சியின் பயணம்!


                                                    பட்டாம்பூச்சியின் பயணம்!

சாலைப் பயணத்தில்
முத்தமிடுவதுபோல்
மோதிச் சென்றன
பருவமடைந்தவுடன்
பறக்கத்துடித்திடும்
பட்டாம்பூச்சிகள்!

சோலைப் பூக்களென
சாலையோரப் பூக்களை நாடி
சரிகின்றன விபத்தில்!

பாதைமாறிய பயணம்
பாதுகாப்பற்றதெனும்
பாடம் கற்பிக்கும்
பட்டாம்பூச்சிகள்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி:கூகிளுக்கு நன்றி

17 கருத்துகள்:

 1. மிக அருமை....

  தொடர்ந்து பதிவிட வாழ்த்துகள் சேஷ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பருக்கு வணக்கம்! இதுவோ.. சுதந்திரம்,ஒத்தைமாட்டுவண்டி போன்ற இடுகைகளை முடிந்தால் படித்து தங்களின்ன் கருத்தினைப் பதிய விழைகிறேன்!
   நன்றி!

   நீக்கு
 2. பட்டாம்பூச்சி !! - English Name என்ன? அதை அப்படியே தமிழில் மொழி பெயர்தால் என்ன வரும்? உங்களது இக்கவிதை நன்றாக
  உள்ளது Sir. Ramanans.

  பதிலளிநீக்கு
 3. நல்ல வரிகள்... பாராட்டுக்கள்...

  பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
 4. இனிய காலை வணக்கம். வண்ணத்து பூச்சியின் கவிதை அருமை.

  பதிலளிநீக்கு