செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

இதுவோ சுதந்திரம்?

                                                          இதுவோ!   சுதந்திரம்?

 இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

தந்திரத்தை நம்பாதே
தன் திறத்தை நம்பென்று
மானிடர்க்கு உரைத்திடும்
மந்திரச்சொல் சுதந்திரம்!

வாக்களிப்பை நம்பி
வாக்களித்தோர்-நிறைவேறா
ஏக்கத்தில் தவிப்பதற்கா
ஏற்பட்டது சுதந்திரம்?

வகுத்திடும் திட்டங்கள்
வந்தடையும் முன்னர்
பகுத்தெடுத்துக் கொள்ளவா
பயன்படும் சுதந்திரம்?

வனம் அழித்தார்-இயற்கை
வளம் அழித்தார்- விளை
நிலம் அழித்தார்- நீர்
நிலை அழித்தார்- இந்
நிலைதொடரவா சுதந்திரம்?

கோடியில் புரள்பவரும்-தெருக்
கோடியில் உழல்பவரும்-வறுமைக்
கோட்டால் பிரிகின்றார்! நற்
குணங்களை துறக்கின்றார்!

மனம்போன போக்கில்
மனிதன் வாழ்ந்திடவா
இன்னுயிர் ஈந்து
இங்களித்தார் சுதந்திரம்!

தீவிரவாதம் பற்றி
தினமொரு வாதம்!-இந்நிலை
மாறிட வேண்டி- நல்
மனங்களின் கீதம்!

ஏற்றம் பெருக்கி- மன
மாற்றம் அருளும்-மூச்சுக்
காற்றாய் மாறி
காக்கட்டும் சுதந்திரம்!

நாட்டை உயர்த்தி
நாமும் உயர்ந்திட- கொடி
ஏற்றி வணங்கி
ஏற்போம் சூளுரை!

-காரஞ்சன்(சேஷ்)


பட உதவி: கூகிள்


23 கருத்துகள்:

  1. //
    நாட்டை உயர்த்தி
    நாமும் உயர்ந்திட- கொடி
    ஏற்றி வணங்கி
    ஏற்போம் சூளுரை
    //

    அருமையான வரிகள்! இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  2. நன்றி ஐயா...


    ஏன்...? என்னும் கேள்வி, முதலில் நம் மனதிலும், பிறகு வெளியிலும் தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளரட்டும்...
    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்

    தாயகத்தை தாக்காதே! கவிதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_8591.html

    சுதந்திர தின தகவல்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_15.html

    பதிலளிநீக்கு
  4. மூச்சுக்
    காற்றாய் மாறி
    காக்கட்டும் சுதந்திரம்!
    நல்ல வரிகள். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. //கோடியில் புரள்பவரும்-தெருக்
    கோடியில் உழல்பவரும்-வறுமைக்
    கோட்டால் பிரிகின்றார்! //

    //ஏற்றம் பெருக்கி- மன
    மாற்றம் அருளும்-மூச்சுக்
    காற்றாய் மாறி
    காக்கட்டும் சுதந்திரம்!//

    மிகவும் அழகான வரிகள்.
    அருமையான கவிதை.
    பாராட்டுக்கள்.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  6. அருமையான வரிகள்.
    // ஏற்றம் பெருக்கி- மன
    மாற்றம் அருளும்-மூச்சுக்
    காற்றாய் மாறி
    காக்கட்டும் சுதந்திரம்! // தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றி!
      -காரஞ்சன்(சேஷ்)

      நீக்கு
  7. விருதுபெற்ற விஷயத்தை தங்கள் செய்தி வழி அறிந்தேன்!
    தகவலுக்கு நன்றி! தங்களின் வருகைக்கும் நன்றி! தொடர்ந்து வருகை புரிந்து தங்களின் கருத்தினைப் பகிர விழைகிறேன்!
    நன்றியுடன்
    காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  8. ஏற்றம் பெருக்கி மனமாற்றம் அருளும்
    மூச்சுக் காற்றாய் மாறி காக்கட்டும் சுதந்திரம்"
    அருமையான கவிதை வரிகள்
    சுதந்திர தின நல்வாழ்த்துகளுடன் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! நன்றி!

      நீக்கு
  9. அன்புள்ள

    ஒவ்வொரு சுதந்திர நாளிலும்
    மனசு உவப்பு அடைவதில்லை
    கோடிகோடியாய் மக்களினம்
    கோடியில்தான் நிற்கிறார்
    வாழ வழியற்று
    அவர் வாழ வழியில்லை
    ஆனாலும் கோடிகோடியாய்
    குவிக்கிறார் சிலர் வாழ்வில்
    என்றைக்கும் இது சமனாகாது
    சமனாகும் அன்றோ சுதந்திரம்
    உவப்பாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு