அன்னத்தின் எண்ணம்!
வன்னமிகு அன்னமே!
கயல்களெலாம் எந்தன்
கண்ணசைவில் மயங்கிநிற்க,
கூவிமகிழும் குயிலினமென்
குரல்கேட்கக் காத்திருக்க
எண்ணம் உரைத்திட -நீ
எந்தூதாய் வருவாயா?
ஏந்திழையே!
உன்னுள்ளம் நிறைந்தவர்க்கு
உன்நிலையை நானுரைப்பேன்!
திரும்பிடுவார் விரைவினில்திண்ணமிது! கலங்காதே!
தூதுசெல்லும் எங்களுக்கும்
துயருண்டு மனதினிலே!
எங்கள் மனத்துயரை
யாரிடம் யாமுரைப்போம்?
ஆயிழைக்கு வியப்பளிக்க
என்னென்று அறிந்திட நான்
ஏனோ தலைப்பட்டேன்!
அன்னத்தின் மொழிகேளீர்!
எண்ணம் உரைத்திட
எங்களைத் தூதுவிட்டீர்!
இன்னுமொரு நூற்றாண்டில்
எங்களின் நிலைஎதுவோ?
வியனுலகும் சுருங்கிடலாம்!
விரல்நுனியில் உலகிருக்க
அன்னத்தைத் தூதுவிட
அந்நாளில் யார்வருவார்?
பெருகிடும் குடியிருப்பால்
அருகிடுமே நீர்நிலைகள்!
காவியக் கதைகளில்தான்
ஓவியமாய் உறைவோமோ?
-காரஞ்சன்(சேஷ்)
ஓவியம் பகிர்ந்து எனை எழுதத் தூண்டிய திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!
ஓவியம் பகிர்ந்து எனை எழுதத் தூண்டிய திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!
மிக அருமையான படைப்பு.
பதிலளிநீக்குமாறுபட்ட சிந்தனைகள்.
அன்னத்தின் அவல நிலை நம்மையும் கலங்கத்தான் செய்கிறது.
அற்புதமான ஆக்கத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்பான ந்ல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
தங்களின் உடனடி வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்குஎன்றும் அன்புடன் - காரஞ்சன்(சேஷ்)
அன்னத்தின் மொழிகேட்டு ஆனந்தமாய்
பதிலளிநீக்குஅழுகிறதே என்னுள்ளம்!
தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது! நன்றி!
நீக்குஅருமையான கவிதை
பதிலளிநீக்குஅன்ன நடை பயிலும்மங்கை
அன்னத்தோடு உரையாடும் காட்சி
ஓவியம். அற்புதம்.
பாராட்டுக்கள்.
சோகத்திலும் ஒரு சுகம் உண்டு
ஏன் தெரியுமா?
அது இதயத்தோடு
என்றும் உறவாடி நிற்கும்
அழுவதால் ஏதாவது
பயனுண்டோ
சொல் அன்பரே
கண்ணீர் விட்டு அழுவதால்
மன பாரம் குறையுமன்றோ?
இப்பூவுலகை விட்டு மறைந்த
உயிரினங்கள் கோடி கோடி
அவற்றில் எங்கள் இனமும் ஒன்று
காணாமல் போன கிராமத்து குருவிகளை
காக்க ஒரு அமைப்பு வந்ததுபோல்
காண்டாமிருகத்தை புலிகளை,
சிங்கங்களை,மற்ற உயிரினங்களை
காக்க ஒரு ஒரு அமைப்பு வந்ததுபோல்
எங்களுக்கும் ஒரு அமைப்பு வரும்
அப்போது நாங்கள் அனைவரும்
பிறப்பெடுத்து மீண்டும் வருவோம்
தூது செல்ல அல்ல .
தெளிந்த நீர் நிலைகளில்
அழகாய் நீந்தி களித்து மகிழ .
தங்களின் வருகையும் கருத்துரையும் ம்கிழ்வளிக்கிறது! நன்றி!
நீக்கு//மற்ற உயிரினங்களை
பதிலளிநீக்குகாக்க ஒரு ஒரு அமைப்பு வந்ததுபோல்
எங்களுக்கும் ஒரு அமைப்பு வரும்
அப்போது நாங்கள் அனைவரும்
பிறப்பெடுத்து மீண்டும் வருவோம்
தூது செல்ல அல்ல .
தெளிந்த நீர் நிலைகளில்
அழகாய் நீந்தி களித்து மகிழ//
அழகான பாஸிடிவ் எண்ண்ங்களை, அன்னத்தின் வாயிலாகச்சொல்லியிருக்கும் ஸ்ரீ பட்டாபிராமன் அவர்களின் வார்த்தைகள், வெள்ளிக் கிண்ணத்தில் பால் பாயஸம் சாப்பிட்டது போல எனக்கோர் மகிழ்ச்சியளிக்கிறது.
பாராட்டுக்கள் + வாழ்த்துகள், சார்.
பால் பாயசத்தில் முந்திரி,பாதாம்,திராட்சை ,பதமாக நெய்யில் வறுத்து கொஞ்சம், ஏலக்காய் பொடி,பச்சை கற்பூரம் போட்டு கலந்து குளிர் சாதன பெட்டியில் வைத்து பகல் வேளையில் ரசித்து ருசித்து சாப்பிடவும்.
நீக்குஅருமையாக இருக்கும்.
//பால் பாயசத்தில் முந்திரி,பாதாம்,திராட்சை ,பதமாக நெய்யில் வறுத்து கொஞ்சம், ஏலக்காய் பொடி,பச்சை கற்பூரம் போட்டு கலந்து குளிர் சாதன பெட்டியில் வைத்து பகல் வேளையில் ரசித்து ருசித்து சாப்பிடவும்.
நீக்குஅருமையாக இருக்கும்.//
மில்க் ஷேக் என்றால் நீங்கள் சொல்வது போல வைத்து ஜில்லென்று சாப்பிட, அடிக்கும் வெயிலுக்கு அற்புதமாக இருக்கும்.
பால் பாயசத்தில் முந்திரி, பாதாம்,திராட்சை, பதமாக நெய்யில் வறுத்து கொஞ்சம், ஏலக்காய் பொடி,பச்சை கற்பூரம் போட்டு கலந்து சுடச்சுட கொண்டுவந்து, என் மனதுக்குப்பிடித்தமானவர்கள் கைகளால் இரண்டு ஆத்து ஆத்திக்கொடுத்தால், அதனை நான் சொட்டுச்சொட்டாக ருசித்தால் ஏற்படும் இன்பமே இன்பம்.
அதுவே பேரின்ப நிலை.
மீதி அனைத்தும் சிற்றின்பமே ஸ்வாமீ. ;)
கருத்துரைக்கு கருத்துரை அளித்த தங்களுக்கு என் நன்றி! வெயில் வேளையில் பால்பாயசம், மில்க் க்ஷேக் உண்மையில் பேரின்பமே ஐயா! நன்றி!
நீக்குஅன்னத்தின் பதில் அருமை! அழகான அர்த்தமுள்ள கவிதை! நன்றி!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே!
நீக்குபெருகிடும் குடியிருப்பால்
பதிலளிநீக்குஅருகிடுமே நீர்நிலைகள்!
காவியக் கதைகளில்தான்
ஓவியமாய் உறைவோமோ?
அன்னத்தின் மொழிகேட்டு
அழுகிறதே என்னுள்ளம்!//
அன்னத்தின் மொழியில் இருக்கும் உண்மை முகத்தில் அறைகிறது.
உங்கள் உள்ளம் அழுவது போல் எல்லோர் உள்ளமும் வருந்தும் நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமல்.
அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்.
தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளிக்கிறது! நன்றி!
பதிலளிநீக்கு/// இன்னுமொரு நூற்றாண்டில்
பதிலளிநீக்குஎங்களின் நிலைஎதுவோ? ///
சிந்திக்க... உணர வேண்டிய வரிகள் ஐயா...
பதிவிட ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள்...
தங்களின் வருகை மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்குபெருகிடும் குடியிருப்பால்
பதிலளிநீக்குஅருகிடுமே நீர்நிலைகள்!
காவியக் கதைகளில்தான்
ஓவியமாய் உறைவோமோ?
அன்னங்களின் மனநிலையை
அருமையாய் உணர்த்திய
அற்புத கவிதைக்கு பாராட்டுக்கள்..
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!
நீக்குஅன்னங்களின் மன நிலைய உணர்த்திய கவிதை யதார்த்தம். பகிர்வுக்கு நன்றி
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
பதிலளிநீக்குநன்று!
பதிலளிநீக்குபுலவர் இராமாநுசம்
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்குகவிதையும் காட்சியும் அருமை ...
பதிலளிநீக்குவாழ்க
தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே!
நீக்குbeauty sesha vazhga nevir pallandu
பதிலளிநீக்குanthuvan cuddalore
Thank You very much my dear friend
பதிலளிநீக்கு