உடைந்த படகுகள்!
வாழ்க்கைப் பயணத்தில்
ஓடிக்களைத்து
ஒடுங்கிடும் மனிதர்கள்போல்
நீரலைமீதினிலே
நித்தம் சுமைதாங்கி
ஓ(டி)டாய்த் தேய்ந்து
ஒதுங்கிய படகுகளோ?
சுமந்து மகிழ்வளித்து
சுகவீனமானபின்னர்
அக்கறைகாட்ட ஆளின்றி
இக்கரையில் ஒதுங்கினவோ?
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி; கூகிளுக்கு நன்றி!
எல்லா வரிகளுமே அருமை.
பதிலளிநீக்கு//சுமந்து மகிழ்வளித்து, சுகவீனமானபின்னர்
அக்கறைகாட்ட ஆளின்றி, இக்கரையில் ஒதுங்கினவோ?//
மிக அருமை. பாராட்டுக்கள்.
தங்களின் உடனடி வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்குவாழ்க்கைப் பயணத்தில்
பதிலளிநீக்குஓடிக்களைத்து
ஒடுங்கிடும் மனிதர்கள்போல்//
நல்ல கற்பனை.
நல்ல கவிதை.
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
பதிலளிநீக்குகரையிலிருந்து
பதிலளிநீக்குபுறப்பட்ட படகுகள் மீண்டும்
கரை சேர்ந்துவிட்டன
என்பதே உண்மை.
அதன் மீது அக்கறை
காட்டி முறையாக
பராமரிக்காது அதை பாழடைய
விட்டுவிட்ட
கறை படிந்த மனிதர்களை
சுமந்ததால் அல்லவோ
அதற்க்கு இந்த நிலைமை.
உங்கள் படங்களே
பல கதைகள் பேசுகிறது
அதற்க்கு மேலும்
அழகு சேர்க்கிறது
உங்கள் கவிதைகள்
பாராட்டுக்கள்
தங்களின் அருமையான கருத்துரைக்கு நன்றி ஐயா!
நீக்குஒடுங்கிடும் மனிதர்கள்போல்
பதிலளிநீக்குநீரலைமீதினிலே
நித்தம் சுமைதாங்கி
ஓ(டி)டாய்த் தேய்ந்து
ஒதுங்கிய படகுகளோ?
வாழ்க்கைப்படகுகள்..!
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மேடம்.
நீக்குபடத்திற்கேற்ற வரிகள்...
பதிலளிநீக்குமனித வாழ்வும் அப்படித்தானோ...?
தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது! நன்றி ஐயா!
நீக்குஅனைவரும் கரையேற்றுதல் மட்டுமே
பதிலளிநீக்குகடமையாகக் கொண்டிருந்த உடைந்த படகுகள்
அருமையான படிமம்
அது பலவிஷயங்களுக்குப் பொருந்தும்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது! நன்றி ஐயா!
பதிலளிநீக்குசிறப்பான வரிகள்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி மேடம்.
பதிலளிநீக்குஅருமை. ரசித்தேன்...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி நண்பரே!
பதிலளிநீக்குsinthikka vaiththathu...!
பதிலளிநீக்குததங்களின் வருகைக்கு நன்றி!
பதிலளிநீக்கு