சனி, 13 ஏப்ரல், 2013

"கேட்போமே கிளிப்பேச்சை!"-காரஞ்சன் (சேஷ்) 
 

கேட்போமே கிளிப்பேச்சை!

பாடிப்பறந்தெங்கும்
தேடிப்பழந்தின்று
கூடி மகிழும்கிளியே!
குற்றம் என்செய்தாய்?
கூண்டில் உனைஅடைத்தார்!

 வட்டமிட்டுத் திரிந்தஎனை
திட்டமிட்டுப் பிடித்துவந்தார்!
சோலையில் திரிந்தஎனை
சோதிடம் சொல்லவைத்தார்!
கோவைப்பழம் விடுத்து
கொடுக்கின்றார்- நெல்மணிகள்!

 சொன்னதைச் சொல்லும் நீ
சோதிடம் அறிவாயோ?
அடுக்கிய அட்டைக்குள்
அனைவருக்கும் பலன்உண்டோ?

 ஈராறு இராசிகளில்
இவ்வுலகம் அடங்குமென்பார்!
பார்ப்பவர் பெயருரைத்துத்
தீர்ப்பினைத் தேர்ந்தெடுக்க
கூண்டைத் திறந்துவிட்டு
கூப்பிடுவார் என்னையுமே!

 உழைப்பவர் ஊக்கம்பெற
ஒருசீட்டு அதிலுண்டா?
ஏமாற்றிப் பிழைப்போரை
எச்சரிக்கும் சீட்டுண்டா?
எதிர்காலம், வளமாக
ஏதெனும் வழியுண்டா? 

எழுதிவைத்த சீட்டிலொன்றை
எடுத்துத் தருவதொன்றே
எமக்கிங்கு இட்டபணி! 

மாற்றம் விளைவித்து
ஏற்றம் காண்பதெல்லாம்
உங்களின் கைகளில்
உள்ளதை அறிவீரா?

 திருத்துவதும் திருந்துவதும்
மானிடரின் கையிலென்று
இனியேனும் உணர்வீரா?

 (சோ) திடமாய் நம்பிஇதை
தினமும் உழைத்திடுக!
விடுதலை அளித்திடுக
விருப்பம்போல் நான்வாழ!

-காரஞ்சன்(சேஷ்)

படங்கள்  உதவி: கூகிளுக்கு நன்றி!
 

25 கருத்துகள்:

 1. அருமை...

  /// திருத்துவதும் திருந்துவதும்
  மானிடரின் கையிலென்று
  இனியேனும் உணர்வீரா? ///

  சிறப்பான வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கு நன்றி ஐயா! சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துகள்! நன்றி!

   நீக்கு
 2. //மாற்றம் விளைவித்து
  ஏற்றம் காண்பதெல்லாம்
  உங்களின் கைகளில்
  உள்ளதை அறிவீரா?//

  கிளிமொழிகள் அருமை. பாராட்டுக்கள்.

  இனிய “விஜய” புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா! புத்தாண்டு வாழ்த்திற்கும் உளங்கனிந்த நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா! நன்றி!

   நீக்கு
 3. // மாற்றம் விளைவித்து
  ஏற்றம் காண்பதெல்லாம்
  உங்களின் கைகளில்
  உள்ளதை அறிவீரா?//

  அறிந்தோம் அருமை வரிகள்

  தொடர வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 4. அருமையான கவிதை! தன்னம்பிக்கைதான் ஜெயிக்கும் என்பதை அழகாக விளக்கிவிட்டீர்கள்! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!

   நீக்கு
 5. அருமை.....

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்களது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! நன்றி!

   நீக்கு
 6. திருத்துவதும் திருந்துவதும்
  மானிடரின் கையிலென்று
  இனியேனும் உணர்வீரா?

  கிளிப்பேச்சு கேட்கவா ??!

  பதிலளிநீக்கு
 7. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்களது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 8. அருமையான வரிகள். புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. தங்களின் வருகைக்கும் வாழித்திற்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோதரரே!

  உங்களின் அன்னம்விடுதூது கவிதையினை சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் வலைப்பூவில் கண்டு இங்கு வந்தேன்.

  அருமையான வலைப்பூச் சொந்தக்காரென இங்கு வந்தபின் கண்டுகொண்டேன்.
  இங்கும் கிளியின் பேச்சு அழகாக அருமையாக இருக்கிறது.
  எளிதாய் இனிமையாய் இயல்பாய் தொடுக்கப்பட்ட வரிகள்...
  ரசித்தேன். வாழ்த்துக்கள்!

  உங்களை அறிய உதவிய சகோ. வெங்கட் நாகராஜ் அவர்களுக்கும் என் நன்றிகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும், வாழ்த்துரைக்கும் என் உளமார்ந்த நன்றி!தங்களுக்கு என் வலைப்பூவை அறிமுகம் செய்த நண்பர் திரு.வெங்கட்நாகராஜ் அவர்களுக்கும் மிக்க நன்றி!

   நீக்கு

 11. வணக்கம்!

  என்றன் வலையில் இசைத்த கருத்தறிந்தேன்!
  உன்றன் நிலையை உணா்ந்து!

  அணைக்க வருவாளோ! வண்ணக் கவியை
  இணைக்கப் படிப்பேன் இனித்து

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 12. தங்களின் வருகை மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா! படைப்பிற்கான இணைப்புகள்
  http://www.esseshadri.blogspot.in/2012/12/blog-post_27.html
  http://www.esseshadri.blogspot.in/2012/10/blog-post_4.html
  நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 13. // எழுதிவைத்த சீட்டிலொன்றை
  எடுத்துத் தருவதொன்றே
  எமக்கிங்கு இட்டபணி! //

  எழுதிவைத்த சீட்டில்தான் எத்தனை எத்தனை முகங்கள்! கிளிக்கு இட்டபணியைப் பற்றி அருமையான கவிதை!

  பதிலளிநீக்கு
 14. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 15. Tru.. நான் கவனிக்கல...----------RAMANAN

  பதிலளிநீக்கு