வியாழன், 19 செப்டம்பர், 2013

தூய்மை! -காரஞ்சன்(சேஷ்)


                                                                 தூய்மை!

குப்பை மனங்களின்
கொடூரச் செயல்களால்
பள்ளிச் சிறுமியர்க்கும்
பாலியல் கொடுமைகள்!

மாசடைந்த மனங்களினால்
தேசமெங்கும் வன்முறைகள்!
தூய்மைப் படுத்த -நீ
துடைப்பம் ஏந்தினையோ?

தூய உள்ளங்களின்
துவளா முயற்சியில்
தீய உள்ளங்கள்
திருந்துமோ இனியேனும்?

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

32 கருத்துகள்:

 1. சமூக சிந்தனையுள்ள அருமையான கவிதை. படத்தேர்வும் அழகு.

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

  //திருந்துமோ இனியேனும்?//

  சந்தேகம் தான்.

  >>>>>.

  பதிலளிநீக்கு
 2. நான் எப்போதோ படித்து ரஸித்து மனதில் நிற்கும் ஓர் ஹைக்கூ நினைவுக்கு வருகிறது. இதோ:

  ”குனிந்து கூட்டினாள் ...
  என் மனம் குப்பையானது”

  -oOo-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்தித் தாள்களில் இதுபோன்ற செய்திகளை ஒருவாரத்திற்குள் அதிகமாகப் பார்க்க நேர்ந்ததில் தோன்றிய சிந்தனை ஐயா!

   நீக்கு
 3. தூய உள்ளங்களின்
  துவளா முயற்சியில்
  தீய உள்ளங்கள்
  திருந்துமோ இனியேனும்?
  வருத்தமான வரிகள்! சமுகம் திருந்தவேண்டும் என்ற ஆதங்கத்தினை புரிந்துகொள்ள வைக்கிறது! நன்றி!

  பதிலளிநீக்கு
 4. தூய உள்ளங்களின்
  துவளா முயற்சியில்
  தீய உள்ளங்கள்
  திருந்துமோ இனியேனும்?

  தூய்மைப்படுத்தும் துடைப்பம் ..
  மன அழுக்குகளையும் அகற்றட்டும்..!

  பதிலளிநீக்கு
 5. தீய உள்ளங்கள் தானாகத் தான் திருந்த வேண்டும்...

  பதிலளிநீக்கு
 6. தீமைகள் எப்போதும்
  தீ போல் பரவத்தான் செய்யும்

  நன்மை எப்போதும்
  நதிபோல் ஓடிக்கொண்டிருக்கும்.

  நதியில் வெள்ளம்பெருகி வரும்போது
  நீர் பெருகி அனைத்தையும்
  அடித்து சென்று விடும்

  அதுபோல்தான் நன்மைகளும்
  ஒருநாள் தீயவைகளை அழித்துவிடும்.

  படம் அருமை.
  கவிதை கருத்துக்களும் அருமை.

  பாரதி எப்போதும்
  பாப்பாக்களுக்குதான்
  பாட்டேழுதினான்
  தாத்தாக்களுக்கு அல்ல

  குழந்தைகளால்தான்

  இந்த உலகம் திருந்தும்
  பக்த பிரகலாதன் கொடுங்கோலன்
  ஹிரநியகசிபுவை
  எதிர்கொண்டதுபோல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுபோல்தான் நன்மைகளும்
   ஒருநாள் தீயவைகளை அழித்துவிடும்.
   //உண்மை!தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

   நீக்கு
 7. மாசடைந்த மனங்களினால்
  தேசமெங்கும் வன்முறைகள்!
  தூய்மைப் படுத்த -நீ
  துடைப்பம் ஏந்தினையோ?//

  மிக பொருத்தமான படம்.பொருத்தமான கவிதை வரிகள். இந்த படத்தையும் கவிதையையும் எல்லா இடங்களிலும் ஒட்டினால் இதை படிக்கும் போதாவது மலர்களை வருத்தும் கொடியவர்கள் திருந்துவார்கள்
  என நினைக்கிறேன்.
  பிஞ்சு மனங்களை நஞ்சாக்கும் படங்களை சுவர்களில் ஒட்டுவதற்கு பதில் நல்லவைகளை நல்ல கருத்துக்களை வீதி எங்கும் சுவரொட்டிகளாக ஒட்டினால் ஒரு சிலராவது திருந்துவார்களே.

  பதிலளிநீக்கு

 8. பிஞ்சு மனங்களை நஞ்சாக்கும் படங்களை சுவர்களில் ஒட்டுவதற்கு பதில் நல்லவைகளை நல்ல கருத்துக்களை வீதி எங்கும் சுவரொட்டிகளாக ஒட்டினால் ஒரு சிலராவது திருந்துவார்களே.//உண்மைதான்!
  தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 9. சிறியவர்களாக இருக்கும்போது இருந்த மனத்தூய்மை பெரியவர்களாக மாறியதும் சிலருக்கு மாறுவது ஏன்? பெரியவர்கள் அந்த மனத்தூய்மையை அப்படியே பின்பற்றினால், சண்டை சச்சரவுகள், தீய எண்ணங்கள் தீண்டாமல் போகாதோ? சிந்திக்க வைக்கும் சீரிய பதிவு!
  பாராட்டுகள்! தொடர்க!

  பதிலளிநீக்கு
 10. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 11. தங்களின் ஆதங்கம் வரிகளில் தெரிகிறது.வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 12. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 13. படமும் அதைத் தொடர்ந்த
  சமூக அவலம் குறித்த ஆழமான சிந்தனையும்
  அதைப் பகிர்ந்த விதமும் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 15. சமூக அவலங்களை சாடிய விதம் அருமை! நன்றி!

  பதிலளிநீக்கு
 16. சிறப்பான சிந்தனை. கை வலிக்க வலிக்க சுத்தம் செய்ய வேண்டியிருக்கும் இச்சிறுமிக்கு....

  இங்கே தான் எத்தனை அவலங்கள்.

  பதிலளிநீக்கு
 17. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 18. Manitha neyathai manathil vithaithale
  inthahaiya avalangal maari vidum
  penmaiyum oru manitham endra purithal vendum
  thangal kavithai sitharalgal migavum arumai nanbare

  பதிலளிநீக்கு
 19. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 20. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு