வெள்ளி, 27 செப்டம்பர், 2013

வானும் நானும்! -காரஞ்சன்(சேஷ்)

வானும் நானும்!


பல்லுருவம் காட்டும்
பனிமேகங்கள்!

விண்ணெங்கும்
பஞ்சுப் பொதியாய்
நண்பகல் வெண்மேகங்கள்!



அதிகாலை, அந்திமாலை
வண்ணப் பூச்சாய்
கண்கவரும் மேகங்கள்!


எதிர்பார்ப்பை பொய்யாக்கி
காற்றின் கடத்தலில்
வேற்றிடத்தில் பொழியும்
கார்மேகங்கள்!


ஆறுதல் சொல்வாரின்றி
அழுது தீர்க்கும்
அடைமழை மேகங்கள்!


எல்லாம் கடந்ததும்
நிர்மலமான நீலவானம்
என்னிடம் உரைத்தது
எ(இ)துவும் கடந்து போகும்!




-காரஞ்சன்(சேஷ்)

படங்கள்: காரஞ்சன்(சேஷ்)
நீலவானம்:  நண்பர் இரவிஜி

34 கருத்துகள்:

  1. இதுவும் கடந்து போகும்.....

    உண்மை. படங்களும் படங்களுக்கான கவிதையும் அருமை.... தொடரட்டும் கவிதைகள்.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் + பாடல் வரிகள் அருமை. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  3. மேகம் குறித்து ஏகம் எழுதிய வரிகள் அருமை! பாரட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  4. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  5. மனித வாழ்வில் மகிழ்வு, துன்பம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், தெளிவு ஆகியவை மேகங்களின் மூலம் விளக்கிய விதம் அருமை! தொடருங்கள்!
    பாராட்டுகள்!
    -தக்‌ஷி

    பதிலளிநீக்கு
  6. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  7. வான எனக்கொரு போதி மரம்
    என்கிற வைரமுத்து அவர்களின் வரியையும்
    நினைவுறுத்திப்போகும் அருமையான படைப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  9. கவிதையும், அதற்கேற்ற படங்களும் அருமை

    பதிலளிநீக்கு
  10. எத்தகைய மனச்சூழலிலும் அண்ணாந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் அதில் தவழும் மேகக்கூட்டமாக மனம் பஞ்சுபோல் லேசாகிவிடும்...

    அருமையான காட்சிகளும் கவிவரிகளும்.. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. இதுவும் கடந்துபோகும்
    மீண்டும் திரும்பி வருவதற்குத்தான்

    படமும் கவிதையும்,கருத்தும் அருமை பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  12. அனைத்தும் அருமை... படங்களும்... பாராட்டுக்கள் ஐயா....

    பதிலளிநீக்கு
  13. அழகிய வான் மேகங்களாய் திகழும் படங்களும் பகிர்வும்.அருமை..
    பாராட்டுக்கள்...!

    பதிலளிநீக்கு
  14. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  15. வண்ணப் பூச்சு மேகம் படம் அருமை...!
    "நிர்மலமான நீலவானம்
    என்னிடம் உரைத்தது
    எ(இ)துவும் கடந்து போகும்!" மனதைக் கவர்ந்த வரிகள்... தொடர்க...!!


    பதிலளிநீக்கு
  16. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  17. எல்லாம் கடந்ததும்
    நிர்மலமான நீலவானம்
    என்னிடம் உரைத்தது
    எ(இ)துவும் கடந்து போகும்!//
    அருமை.
    படங்களும், கவிதை வரிகளும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  18. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  19. ஏற்றிப் போற்று, ஒட்டு வீடு, சுழற்சி, தென்னை கவர்ந்த விதம், மேக கூட்டஙகள் கவிதை . . . . அனைத்தும் அருமை . . .
    நீண்ட நாட்களுக்குப் பிறகு நுழைகிறேன். . . .
    நன்றி..

    பதிலளிநீக்கு
  20. படங்களை நீங்கள் தனி பதிவாகவே போட்டிருக்கலாம் சார் .,.. நல்லாத்தான் இருக்கு .. கொஞ்சம் பெரிதாக்கி ஒரு பதிவாக போடுங்கள்

    பதிலளிநீக்கு
  21. manithargal vaazhvum van megam pola thane
    inbamum thunbamum marri maari varuvathu
    vaan megam urumaari ovvoru vithamaai therivathu pola
    num vaazhvilum anaithum vanthu kadanthu pogum
    ithai yetru kondal endrendrum nimmathi thane

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  22. manithargal vaazhvum van megam pola thane
    inbamum thunbamum marri maari varuvathu
    vaan megam urumaari ovvoru vithamaai therivathu pola
    num vaazhvilum anaithum vanthu kadanthu pogum
    ithai yetru kondal endrendrum nimmathi thane

    பதிலளிநீக்கு
  23. உண்மைதான்! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு