வெள்ளி, 4 அக்டோபர், 2013

தாயுள்ளம்!- காரஞ்சன்(சேஷ்)வெண்ணிற மலர்தேடி
வண்டினம் பாடிவர
திகட்டாத தேனுண்ண
தேன்சிட்டும் தேடிவர
காகமொடு அணிலும்
களிப்புடன் கனிஉண்ண
வெயில் வேளைதனில்
விரிக்கின்றாய் நிழற்குடையை!

பறித்து பழம்தின்ன
சிறுவர்கள் பலர்கூட
இரவினில் வெளவால்கள்
பழமுண்ண உனைநாட

படைப்பின் நோக்கம்
பயன்பட வாழ்தல்
என்றுணர்த்தவோ
இத்தனையும் தாங்கி

சர்க்கரைப் பழமரமே-நீ
புத்தம் புதுமலர்களுடன்                                                                                                           புன்முறுவல் பூக்கின்றாய்?

-காரஞ்சன்(சேஷ்)
படங்கள்: காரஞ்சன்(சேஷ்)

20 கருத்துகள்:

 1. புத்தம் புதுமலர்களுடன் புன்முறுவல் பூக்கின்ற
  சர்க்கரைப் பழமரம் கவிதையாய்
  இனிக்கிறது..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 2. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 3. கவிதையும் சக்கரையாய் இனிக்கிறது
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 5. கற்கண்டோ! சர்க்கரையோ என இனிக்கிறது கவிதை! வாழ்வாங்கு வாழ வழிவகை சொல்லும் கவிதை! பகிர்விற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 6. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 7. படமும் கவிதையும் அழகு! நன்றி!-தக்‌ஷி

  பதிலளிநீக்கு
 8. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 9. சர்க்கரைப் பழமரமே-நீ
  புத்தம் புதுமலர்களுடன் புன்முறுவல் பூக்கின்றாய்?//
  அருமையான வரிகள்.
  அழகிய படம், அழகிய கவிதை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 11. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 12. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 13. புத்தம் புதுமலர்களுடன் புன்முறுவல் பூக்கின்ற
  சர்க்கரைப் பழமரம் கவிதையாய் இனிக்கிறது.


  வாழ்த்துகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 14. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு