செவ்வாய், 29 அக்டோபர், 2013

காலம்! உறவுப்பாலம்!



நாட்கணக்கில் காத்திருந்து
கடிதம் கண்டவுடன்
கவலை மறந்தது
ஒரு காலம்!

அவசரத்திற்கு மட்டுமின்றி
அனைத்திற்கும் தந்தி என
அடுத்தொரு காலம்!
 
வரிவடிவம் மட்டுமின்றி
குரல்கேட்டு குதூகலிக்க
தரைவழித் தொலைபேசி
தடம்பதித்த தொருகாலம்! 

படமெடுக்கும்! பாட்டிசைக்கும்!
பண்பலைகள் பலஒலிக்கும்!
செல்லுமிடமெங்கும்
செய்திகளைச் சேர்க்கும்!

செல்வந்தர் கைகளிலே
“செல்”லிருந்த நிலைமாறி
எல்லோர்க்கும் பொதுவாகி
செல்லுமிடமெங்கும்
செல்லுடனே செல்லும்
செல்வாக்கு பெற்றது- இக்காலம்!

 உலகைச் சுருக்கி ஊராக்கி
ஆசைமுகம்பார்த்து
அளவளாவும் வசதிகளை
இணையம் அளிப்பதுவும்- இக்காலம்!

 காலமாற்றத்தில்
பாலமாய்ப் பலவடிவில்
பயனளிக்கும் தொழில்நுட்பம்
வாழிய வாழியவே!
                                                      -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

28 கருத்துகள்:

  1. சொன்னவிதம் மிகவும் அருமை ஐயா... படமும் அருமை... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  2. செல் தொழில் நுட்பம்
    உலகை சுருக்கியிருக்கலாம்

    ஆனால் பறவைகள்போல் விடிந்ததும்
    வெளியில் சென்று மாலையில்
    செல் போன்ற அறைகளில்
    அடையும் மனிதர்களின்
    உள்ளம் சுருங்கிவிட்டதை
    யார் மீண்டும் விரிவாக்க இயலும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள் ஐயா! நான் முன்பு ஒரு கவிதையில் உலகம் சுருங்கிடலாம்! மனித உள்ளங்கள் சுருங்குவதேன்? என எழுதியிருந்தேன். தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  3. தகவல் தொடர்பு வளர்ந்த விதம் குறித்து தாங்கள் எழுதிய விதம் அருமை! படமும் அழகு! பதிவிற்கு நன்றி!-தக்‌ஷி

    பதிலளிநீக்கு
  4. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  5. கடிதம் எழுதுவதும், வாழ்த்து மடல்கள் அனுப்புவதும் அருகிவிட்ட நாட்கள்! மின்னஞ்சல், குறுஞ்செய்தி என தகவல் பரிமாற்றம் விரைவாக வளர்ந்துவிட்ட நிலையில் மனிதர்களிடம் பொறுமை குறைகிறதோ என எண்ணத் தோன்றுகிறது! பட்டாபிராமன் ஐயா கூறுவது போன்று உள்ளம் சுருங்கும் நிலை கவலையளிக்கிறது! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  6. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்
    ஐயா

    கவிதையில்ஒரு புதியபுரட்சிவடிவம் கருத்துக்கள் அருமை வாழ்த்துக்கள்ஐயா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

      நீக்கு
  8. காலத்தின் மாற்றத்தை சொல்லிப்போனவிதம்
    மிக மிக அருமை
    தொடர்பு சாதனங்கள் பெருகி
    தொடர்புகள் குறைந்த காலமும்
    இந்தக் காலமாகத்தான் இருக்கும்
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

      நீக்கு
  9. உள்ளங்கையில் உலகம்...

    அருமையான கவிதை!
    நல்ல சிந்தனை!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. //பாலமாய்ப் பலவடிவில்
    பயனளிக்கும் தொழில்நுட்பம்
    வாழிய வாழியவே! //

    சொல்லியது யாவும் அருமை. உண்மை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். சொல்லியவிதம் சுவையோ சுவையாக உள்ளது. ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

      நீக்கு
  11. படமெடுக்கும்! பாட்டிசைக்கும்!
    பண்பலைகள் பலஒலிக்கும்!
    செல்லுமிடமெங்கும்
    செய்திகளைச் சேர்க்கும்!
    ரசித்தேன்...நன்றி...

    பதிலளிநீக்கு

  12. காலமாற்றத்தில்
    பாலமாய்ப் பலவடிவில்
    பயனளிக்கும் தொழில்நுட்பம்
    வாழிய வாழியவே!

    வாழ்த்த்தான வேண்டும் ..!

    பதிலளிநீக்கு
  13. தங்களின் வரவும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி !

    பதிலளிநீக்கு
  14. உலகைச் சுருக்கி ஊராக்கி
    ஆசைமுகம்பார்த்து
    அளவளாவும் வசதிகளை
    இணையம் அளிப்பதுவும்- இக்காலம்!

    காலமாற்றத்தில்
    பாலமாய்ப் பலவடிவில்
    பயனளிக்கும் தொழில்நுட்பம்
    வாழிய வாழியவே!//

    தொழில்நுடபம் வாழிய வாழியவே!
    அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  15. தங்களின் வரவும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி !

    பதிலளிநீக்கு
  16. தங்களின் வரவும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி நண்பரே !

    பதிலளிநீக்கு
  17. தங்களின் வரவும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி நண்பரே !

    பதிலளிநீக்கு
  18. தங்களின் வரவும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி!

    பதிலளிநீக்கு