ஞாயிறு, 20 அக்டோபர், 2013

நாம் சிரிக்கும் நாளே திருநாள்!- காரஞ்சன்(சேஷ்)

நாம் சிரிக்கும் நாளே திருநாள்!


 
திருவுடையோர் நாளாக திருநாள்கள் இல்லாமல்
வறுமைநிலை அகன்று வளம்பெறும்நாள் திருநாள்!

கற்றறிந்தோர் ஒளியேற்ற கல்லாமை இருளெங்கும்
இல்லாமற் போனதென இனிக்கும் நாள் திருநாள்!

விண்முட்டும் விலைவாசி! விளைநிலமும் மனையாச்சு!
நிலத்தடி  நீருமிங்கே   நீளாழம் போயாச்சு!

போராடி விளைத்தபொருள்   போறாத விலைபோச்சு!
மண்ணை நம்பிவாழ்வோர்   மனமுடையும் நாளாச்சு!

வான்மழையின் கருணையினால்  வளமான பயிர்விளைய
உழவன் மகிழும்நாள் உலகிற்கே திருநாள்!

பெண்ணினத்திற் கெதிரான வன்முறைகள் ஒழிந்திங்கு
அண்ணல் விழைவுதனை அடையும்நாள் திருநாள் !

அண்டை நாடுகளின் சண்டை நிலையகன்று
இன்னலின்றி மக்களெங்கும் இன்புறும்நாள் திருநாள்!

வேற்றுமையால் விளைந்திடும் வீணான கலவரங்கள்
ஒற்றுமையால் ஒழிந்ததென உவக்கும்நாள் திருநாள்!

மொழியாலும் மதத்தாலும் பழித்திடும் நிலைமாற
எழுச்சியுடன் நாம்முயலும் எந்நாளும் திருநாள்!

ஊழல் ஒழித்திடவும்   உழைத்தே உயர்ந்திடவும்
அழையாமல் முன்வந்தால் அந்நாளே திருநாள்!

தந்திரத்தை நம்பாமல் தம்திறத்தை நம்பி
விந்தைகள் விளைவிக்க விழையும் நாள் திருநாள்!

நன்மைகள் பெருகி நாடு வளம்பெற்றதென்று
சிந்தை குளிர்ந்து “நாம் சிரிக்கும்நாளே திருநாள்!”

                               -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!


திரு ரூபன் அவர்களின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டிக்கான கவிதை!

56 கருத்துகள்:

 1. அருமை ஐயா... நன்றி... நடுவர்களுக்கு அனுப்புகிறேன்...

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. தந்திரத்தை நம்பாமல் தம்திறத்தை நம்பி
  விந்தைகள் விளைவிக்க விழையும் நாள் திருநாள்!

  நன்மைகள் பெருகி நாடு வளம்பெற்றதென்று
  சிந்தை குளிர்ந்து “நாம் சிரிக்கும்நாளே திருநாள்!”

  வெற்றி பெற வாழ்த்துக்ள்..!

  பதிலளிநீக்கு
 3. கருசார்ந்த அருமையான கவிதை
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 5. அந்த நாள் வர இறைவன் இரங்கட்டும் இவ்வுலக உயிர்கள் மீது

  பதிலளிநீக்கு
 6. //தந்திரத்தை நம்பாமல் தம்திறத்தை நம்பி
  விந்தைகள் விளைவிக்க விழையும் நாள் திருநாள்!

  நன்மைகள் பெருகி நாடு வளம்பெற்றதென்று
  சிந்தை குளிர்ந்து “நாம் சிரிக்கும்நாளே திருநாள்!”//

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மகிழ்வளித்தது ஐயா! வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!

   நீக்கு
 7. வான்மழையின் கருணையினால் வளமான பயிர்விளைய
  உழவன் மகிழும்நாள் உலகிற்கே திருநாள்!
  வரிக்கு வரி சிறப்புங்க.
  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மிகவும் மகிழ்வளித்தது! நன்றி!

   நீக்கு
 8. அத்தனையும் ஒன்று சேரும் நாளே திருநாள் என
  அழகாககக் கவியில் உரைத்தீர்கள்!

  அருமை! போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோதரரே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரி!

   நீக்கு
 9. வணக்கம்
  ஐயா

  தங்களின் மின்னஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.
  --------------------------------------------------------------------------------------------------------------
  நம் தமிழர்கள் நெற்றி வியர்வை சிந்தி உதிரத்தின் நரம்புகள் முறுக்கேற உழைக்கும் வர்க்கம் அவர்களின் நினைவு சுமந்த இன்னும் பல அம்சங்கள் நிறைந்த கவிதையைாக உள்ளது கவிதையின் வரிகள் அழகு போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்....ஐயா....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-
  -------------------------------20/10/2013...............................................................

  பதிலளிநீக்கு
 10. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 11. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி

  பதிலளிநீக்கு
 12. தலைப்புக்கேற்ற கருத்துச் செறிவுடைய அருமையான கவிதை! வ்றியவரின் நிலை, விவசாயி படும் துயரம், அண்டை நாடுகளின் ஆக்ரமிப்பு, பெண்ணினத்திற்கெதிரான வன்முறைகள் அனைத்துமகலும் நாள் திருநாள் என்ற கருத்து அருமை! பாராடுக்கள்!
  வெற்றிபெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 14. அருமையான கவிதை.

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. ஒவ்வொரு வரியும் சொற்களும் கருத்துச் செறிவுடன் இருக்கின்றன. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 16. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி

  பதிலளிநீக்கு
 17. எளிய, அழகிய, தலைப்புக்கேற்ற, கருத்துச் செறிவுள்ள கவிதை! போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்!- தக்‌ஷி

  பதிலளிநீக்கு
 18. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி

  பதிலளிநீக்கு
 19. ஊழல் ஒழித்திடவும் உழைத்தே உயர்ந்திடவும்
  அழையாமல் முன்வந்தால் அந்நாளே திருநாள்!//
  தந்திரத்தை நம்பாமல் தம்திறத்தை நம்பி
  விந்தைகள் விளைவிக்க விழையும் நாள் திருநாள்!//
  Shanmugasundaram Ellappan

  அருமையான வரிகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி

   நீக்கு
 20. பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி

   நீக்கு
 21. “ ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள் ( http://2008rupan.wordpress.com/2013/11/13/ரூபனின்-தீபாவளிச்-சிறப்-2

  வரிசையில் தங்களுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது . மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

  2வது-சேஷாத்திரி(காரஞ்சன்/சே)
  கவிதைதலைப்பு-நாம் சிரிக்கும் நாளே திருநாள்
  வலைத்தளமுகவரி- http://esseshadri.blogspot.in/2013/10/blog-post_20.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கு நன்றி! தங்களின் கருத்துரையால் செய்தி அறிந்து மகிழ்வுற்றேன்! மிக்க நன்றி!

   நீக்கு
 22. போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! வாழ்த்தியமைக்கு நன்றி!தங்களைப் போன்றவர்களின் வாழ்த்துகள் என்னை மென்மேலும் எழுதத் தூண்டும் என்பதில் ஐயமில்லை! தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி!

   நீக்கு
 23. ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கு நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது உளமார்ந்த நன்றி!

   நீக்கு
 24. ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கு நல் வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மிக மகிழ்வளித்தது! தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி!

   நீக்கு
 25. போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 26. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது உளமார்ந்த நன்றி!

  பதிலளிநீக்கு
 27. அருமையான கவிதை! பரிசுக்கு உகந்த வரிகள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது உளமார்ந்த நன்றி!

   நீக்கு
 28. நன்மைகள் பெருகி நாடு வளம்பெற்றதென்று
  சிந்தை குளிர்ந்து “நாம் சிரிக்கும்நாளே திருநாள்!”
  போட்டியில் வெற்றி பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.....!
  கவிதை அருமை....! ஒவ்வொரு வரியும் ரசித்தேன். சரியான கவிதையை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் வாழ்த்தும் நன்றியும் உரித்தாகட்டும். தொடரவாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது உளமார்ந்த நன்றி!

   நீக்கு

 29. வணக்கம்!

  சிந்தை குளிர்ந்து சிரிக்கும் திருநாளைத்
  தந்தீா் தமிழால் தழைத்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது உளமார்ந்த நன்றி ஐயா!

   நீக்கு
 30. தீபாவளிக் கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றதற்கு இனிமையான வாழ்த்துகள். அழகான ஆழமான கவிதை வரிகள். அன்புடன் சொல்லுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது உளமார்ந்த நன்றி!

   நீக்கு
 31. போட்டியில் வெற்றிபெற்றமைக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 32. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது உளமார்ந்த நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 33. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எனது உளமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 34. வணக்கம்
  தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் வெற்றியடைதமைக்கான சிறப்புச்சான்றிதழ் அனுப்பப்பட்டுள்ளது. தங்களின் கையில் வந்து கிடைத்தவுடன் rupanvani@yahoo.com
  dindiguldhanabalan@yahoo.com இந்த இரு மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு