வியாழன், 31 அக்டோபர், 2013

தீபாவளிச் சிந்தனைகள்! -காரஞ்சன்(சேஷ்)



சிறுவயதில்..

அடைகாத்த ஆசைகளுக்கு
விடைகிடைக்கும் நாளாய்
அடைமழை ஐப்பசியில்
அமைந்திடும் தீபாவளி!

புத்தாடை  உடுத்தி
மத்தாப்பு கொளுத்தி
இருப்பதைப் பகிர்ந்து
இனிப்பொடு காரம்
இணைந்துண்ட மகிழ்வுக்கு
ஈடில்லை உலகினிலே!

இருண்ட வானம்
இடையிடையே வெளிவாங்கி
வறுமை நிலையல்ல
வளம்பெறுவீர்! என்றுணர்த்தும்!

தூறலில்லா வேளைகளில்
ஈரம் உலர்த்திட
இருக்கும் பட்டாசை
விரிந்தகன்ற தாம்பாளம்
முற்றத்தின் மூலைதனில்
கூடல் வாய் பகுதியிலே
குச்சிமேல் சுமந்திருக்கும்!

காலை விடிவதற்குள்
கலசமும் மத்தாப்பும்!
சரமாய் வெடித்தால்
சட்டென முடியுமென்று
சரங்களைப் பிரித்து
சரிசமமாய்ப் பகிர்ந்திடுவோம்!

எட்டுப் பிள்ளைகளும்
விட்டு விட்டு வெடிப்பதனால்
இடைவேளையின்றி
வெடிச்சத்தம் கேட்டிருக்கும்!

அந்நாளில்
தீபாவளி இரவில்
இறுதியாய் ஒலிக்கும்
பட்டாசின் வெடிச்சத்தம்
இவ்வளவு விரைவாக
இந்நாள் முடிந்ததே
எனும் தாக்கத்தை
என்னுள் விதைத்தது!

இப்போதெல்லாம்..

இறுதியாய் ஒலிக்கும்
ஒற்றை வெடிச்சத்தம்
பட்டாசுத் தொழிற்சாலையில்
திரியாய்க் கருகிய
உயிர்களின் சோகத்தை
உணர்த்துவதாய்த் தோன்றுகிறது!

வெடிக்கும்போது
வெளிப்படும் புகையோ
காற்றில் நஞ்சை
ஏற்றிச் செல்கிறது!
மாசுபடும் காற்றாலே
மனிதர்க்குப் பலநோய்கள்!

தீபஒளித் திருநாளில்
ஒளியேற்றி
வெடி தவிர்ப்போம்!
இணைந்து கொண்டாடி
இன்புற்று வாழ்ந்திடுவோம்!

                                                                -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

30 கருத்துகள்:

  1. பகற்கனவு

    இருந்தும் நல்லவை
    நடக்க கனவு காண்பது நல்லதே

    என்றேனும் ஒருநாள்
    கனவு நனவாகலாம்

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாத்துகள்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய தீபாவளி நல்வாத்துகள்!

      அய்யா நான் சைவம்

      நீக்கு
    2. மன்னிக்க வேண்டுகிறேன்! மீண்டும் ஒருமுறை நல்வாழ்த்துகள்! கீபோர்டில் தகராறு! சரி செய்துவிட்டேன்! நன்றி!

      நீக்கு
    3. மன்னிப்பு எதற்கு?

      எதுவும் இடம் மாறினால்
      ஏற்படும் விளைவுகள்
      அவ்வளவுதான்.

      வாழ்க்கையை ரசிப்போம்.

      நன்றி.

      தீப ஒளி குறித்த
      இவன் பதிவுகள் உங்களுக்காக
      காத்திருக்கின்றன

      வருகை தாருங்கள்.

      நீக்கு
  3. //தீபஒளித் திருநாளில் ஒளியேற்றி வெடி தவிர்ப்போம்!
    இணைந்து கொண்டாடி இன்புற்று வாழ்ந்திடுவோம்!//

    ;) இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகை மகிழ்வளித்தது! நன்றி ஐயா! தங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!

      நீக்கு
  4. தீபஒளித் திருநாளில்
    ஒளியேற்றி
    வெடி தவிர்ப்போம்!
    இணைந்து கொண்டாடி
    இன்புற்று வாழ்ந்திடுவோம்!//
    அருமையான கவிதை.
    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! நன்றி

      நீக்கு
  5. வணக்கம்
    ஐயா

    ஒவ்வொரு வரிகளும் மிக அழகாக கருத்தாழம்மிக்க உள்ளது.... பதிவு அருமை வாழ்த்துக்கள்

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகை மகிழ்வளித்தது! நன்றி ஐயா! தங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!

      நீக்கு
  6. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகை மகிழ்வளித்தது! நன்றி ஐயா! தங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!

      நீக்கு
  7. // அடைகாத்த ஆசைகளுக்கு
    விடைகிடைக்கும் நாளாய்
    அடைமழை ஐப்பசியில்
    அமைந்திடும் தீபாவளி! //

    உங்கள் கவிதை வரிகளைப் படித்ததும் அந்நாளைய ஐப்பசி அடைமழை நினைவுக்கு வந்தது. அன்றைய ஐப்பசி மழையும், அன்றைய தீபாவளி மகிழ்ச்சியும் எங்கே போனது என்றே தெரியவில்லை!
    எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. உண்மைதான் ஐயா! சமீப காலங்களில் மழையே இல்லாமல் தீபாவளி கொண்டாட வேண்டியுள்ளது! பெரியவர்களும் பிள்ளைகளும் நிறைந்திருந்த வீடுகள், பண்டிகைக்காலங்களில் மிக்க மகிழ்வளித்தன. இன்றும் பசுமையாய் நெஞ்சில் அந்நாளைய நினவலைகள்! நீங்கள் கூறியது போல் அன்றைய தீபாவளி மகிழ்ச்சி எங்கே போனதென்று தெரியவில்லை! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்களுக்கும் எங்களது உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. சரியாகச் சொன்னீர்கள் ஐயா...

    இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  11. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! தாங்கள் விழைவதுபோல் ஒலி குறைத்து வெடி தவிர்த்து நல்லொளி பரவும் நன்னாளாய் அமையட்டும்! இன்றைய வெடியோசை இளந்தளிர்கள் திரியாய்க் கருகியதை வெளிப்படுத்துவதாய் அமைவதைக் கூறி வெடிதவிர்க்க வேண்டியது அருமை! நன்றி! தீபாவளி நல்வாழ்த்துக்கள்!-தக்க்ஷி

    பதிலளிநீக்கு
  12. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  13. தீபாவளி நல் வாழ்த்துக்கள்.


    சுப்பு தாத்தா.
    subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு நன்றி! தங்களுக்கு என் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

      நீக்கு
  14. இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு நன்றி! தங்களுக்கு என் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்

      நீக்கு
  15. தங்களின் வருகைக்கு நன்றி! தங்களுக்கு என் உளமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  16. அருமையான படைப்பு! வெடிகளை தவிர்த்து இனிமையாக கொண்டாடலாம்தான்! ஆனால் அதை நம்பியும் நிறைய குடும்பங்கள் உள்ளதே! பாதுகாப்பு தந்து பாதுகாப்போடு கொண்டாடுவோம் தீபாவளியை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! அதிக சப்தமில்லா வெடிகளைப் பயன்படுத்தி ஆபத்தான வெடிகளைத் தவிர்க்கலாம்! நன்றி ஐயா! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. No rains thanks to the weatherman "RAMANAN" and no "tapas" sound thanks to the pollution control dept. However the festival went smooth. sharing the "happy" to u also Sir. Ramanans

    பதிலளிநீக்கு
  19. தங்களின் வருகைக்கு நன்றி! இந்த ஆண்டு தேவையான அளவிற்கு இன்னும் மழை பெய்யாதது வருத்தமளிக்கிறது! என் சொந்த கிராமத்தில் இனிமையாகக் கொண்டாடினேன்! ஒலிமிகுந்த பட்டாசுகள் குறைந்தது மகிழ்வளிக்கிறது!

    பதிலளிநீக்கு