வியாழன், 24 அக்டோபர், 2013

இனியொரு விதி செய்வோம்! -காரஞ்சன்(சேஷ்)



வெண்முத்து வெண்டைகளை
நீதி கேட்டு வீதியில் இறைத்தனரோ?

விளைவித்தது குற்றமா?
விளைந்தது குற்றமா?

விழலுக்கா நீரிறைத்தோம்?
விளைவதற்கே உழைத்தோம்!
விலைபோகவில்லையெனில்
வீதியில் இறைத்தல் நன்றோ?

பாலின்றிப் பலகுழந்தை
பாரினில் பரிதவிக்க
பாலின் விலையுயர்த்த
சாலையில் சாய்க்கின்றார்!

ஆதரவற்றோர் இல்லங்களுக்கு
அளித்திடலாம் இலவசமாய்!
உண்பொருள் ஈந்ததினால்
உவகை பிறக்காதோ?

பசியாறிய உள்ளங்கள்
பரிமாறும் வாழ்த்திற்கு
பாரினில் விலையேது?

விலைபோக வில்லையென
விளைந்த பொருட்களை
வீணாக்கல் தடுத்திடவே
இனியொரு விதிசெய்வோம்!
எந்நாளும் அதைக்காப்போம்!

  -காரஞ்சன்(சேஷ்)

செய்தி: நன்றி தினமலர்.

30 கருத்துகள்:

  1. //விளைந்த பொருட்களை
    வீணாக்கல் தடுத்திடவே
    இனியொரு விதிசெய்வோம்!
    எந்நாளும் அதைக்காப்போம்!//

    சரியாகச் சொன்னீர்கள். விளைந்தது அதிகமெனில் இப்படியா செய்வார்கள்.... அநியாயம்....

    பதிலளிநீக்கு
  2. தங்களின் உடனடி வருகைக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  3. ஆமாம் ஐயா! மனம் வேதனைப் படுகிறது! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  4. அதுதான் அப்பவே ஒபாமா சொன்னார், அதிகம் பொருட்களை வேஷ்ட் செய்வது இந்தியர்கள்தான்னு உண்மைதானோ ?

    பதிலளிநீக்கு
  5. மனம் வேதனைப் படுகிறது! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  6. சரியாகச் சொன்னீர்கள்
    இது வெறும் விளம்பரத்திற்காகச் செய்வது
    வீணாக்குதலை விட
    நீங்கள் சொல்வதுபோல் செய்தால்
    கொஞ்சம் மனத்திருப்தியாவது மிஞ்சும்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  7. விளைந்த பொருட்களை
    வீணாக்கல் தடுத்திடவே
    இனியொரு விதிசெய்வோம்!
    எந்நாளும் அதைக்காப்போம்!

    ஆதங்கமான பகிர்வுகள்..!

    பதிலளிநீக்கு
  8. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  9. உணவுப்பொருளின் மகிமையறியா
    மூடர்கள்.இவர்கள்

    உணவை இவர்களா விளைவித்தார்கள் ?
    கதிரவனும், பூமித்தாயும் சேர்ந்து
    உருவாக்கிய கலவை அல்லவா இந்த உணவுப்பொருள்

    விளைபொருளை விற்று லாபம்
    பெறுவதே இவர்கள் குறிக்கோள் என்றால்
    இப்படிதான் அவர்கள் உழைப்பும் காசும்
    வீணாகும்

    காயை வெய்யிலில் உலர்த்தி வற்றலாக
    விற்கலாம்.

    பதப்படுத்தி சேமித்து வைத்து பயன்படுத்தலாம்

    இதை எல்லாம் விடுத்து பாடுபட்டு விளைந்ததை
    வீதியிலே வீசும் இவர்கள் அறிவிருந்தும்
    அதை பயன்படுத்த தெரியாத மூடர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள் ஐயா! தங்களின் கருத்துரைக்கு நன்றி!

      நீக்கு
    2. பாடுபட்டு விளைவித்த பொருளுக்கு
      உரிய விலை கிடைக்கவில்லை என்று
      வீதியிலே விட்டெறியும் இந்த சூரர்கள்
      கொள்ளை லாபம் கிடைத்தபோது
      எங்கே சென்றார்கள்?

      அதிகமாக கிடைத்த பணத்தை
      யாருக்காகவாவது தான தர்மம் செய்தார்களா
      அல்லது இன்று அரசு மீது குற்றம் சுமத்தும்
      அரசிக்கு வரி செலுத்தினார்களா?

      இவர்களிடம் ஒற்றுமை இல்லாமையால்
      இடை தரகர்கள் நடுவிலே புகுந்துகொண்டு
      அட்டைபோல் அனைவரின் உழைப்பையும் உறிஞ்சி
      குடிப்பதை என்று உணரப்போகிறது இந்த சமூகம்?

      அரசு உழவர் சந்தைகளை ஏற்படுத்தி கொடுத்தது
      அதையும் இவர்கள் பயன்படுத்தவில்லை.
      அதற்க்கு மூடுவிழா செய்துவிட்டார்கள்

      கூட்டுறவு இயக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது
      அந்த வாய்ப்பையும் இவர்கள்
      பயன்படுத்திக்கொள்ளவில்லை

      எல்லாவற்றையும் அரசியல்வாதிகளின்
      பொறுப்பில்விட்டுவிட்டு இவ்வாறு புலம்பி
      திரிவதால் ஒரு பயனும் இல்லை.

      நிர்வாகத்தில் அவர்கள் புகுந்துகொண்டு
      கூட்டுறவு இயக்கத்தையே
      நிர்மூலம் செய்து விட்டார்கள். .

      நீக்கு
    3. இவர்களிடம் ஒற்றுமை இல்லாமையால்
      இடை தரகர்கள் நடுவிலே புகுந்துகொண்டு
      அட்டைபோல் அனைவரின் உழைப்பையும் உறிஞ்சி
      குடிப்பதை என்று உணரப்போகிறது இந்த சமூகம்?
      //அருமையாகச் சொன்னீர்கள் ஐயா! நன்றி!

      நீக்கு
  10. //விலைபோக வில்லையென
    விளைந்த பொருட்களை
    வீணாக்கல் தடுத்திடவே
    இனியொரு விதிசெய்வோம்!
    எந்நாளும் அதைக்காப்போம்!//

    சரியாகச் சொன்னீர்கள். எத்தனை பேர் உணவு கிடைக்காமல் தவிக்கிறார்கள். அநியாயம் தான்....:((

    பதிலளிநீக்கு
  11. அருமையான கருத்துள்ள யோசிக்க வைக்கும் ஆக்கம். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  12. பாலின்றிப் பலகுழந்தை
    பாரினில் பரிதவிக்க
    பாலின் விலையுயர்த்த
    சாலையில் சாய்க்கின்றார்!

    ரசித்தேன்...!! பூமித்தாய் இவர்களை திரும்பியும் பார்க்காமலே போகட்டும்

    பதிலளிநீக்கு
  13. ஆதரவற்றோர் இல்லங்களுக்கு
    அளித்திடலாம் இலவசமாய்!
    உண்பொருள் ஈந்ததினால்
    உவகை பிறக்காதோ?

    பசியாறிய உள்ளங்கள்
    பரிமாறும் வாழ்த்திற்கு
    பாரினில் விலையேது?//

    செய்தியாக படித்த போது என் மனதில் எழுந்த எண்ணம் இது. அழகாய் அதை கவிதை வடித்து விட்டீர்கள்.


    எவ்வளவு ஆதரவற்ற இல்லங்கள் இருக்கிறது அங்கு கொடுத்து இருக்கலாம். பசியாறிய உள்ளங்கள் வாழ்த்தும் வாழ்த்து இவர்களை மேலும் வாழ வைக்குமே!
    இயற்கை சதி செய்கிறது விளைச்சல் இல்லை என்று சாடும் விவாசாயிகள் இப்படி விளைந்த செல்வத்தை அலட்சியப் படுத்துவது எவ்வகையில் நியாயம்?
    அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
  14. நல்லதொரு சிந்தனை! உணவு பொருட்களை வீணாக்காமல் இல்லாதவர்க்கு தந்து இருக்கலாம்! சிறப்பான படைப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  15. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  16. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  17. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு