செவ்வாய், 12 நவம்பர், 2013

நீங்காத எண்ணம் ஒன்று.... -காரஞ்சன்(சேஷ்)





நீங்காத எண்ணம் ஒன்று......

பிறந்த இடமும்
வளர்ந்த வீடும்
நீங்கா நினைவுகளில்
நிச்சயம் இடம்பிடிக்கும்!

சுட்ட கல்லொடு
சுண்ணாம்பு மட்டுமின்றி
நினைவில் வாழ்வோரின்
எண்ணக் கலவைகளை
தன்னுள் கொ(க)ண்ட வீடு!

பணியின் பொருட்டு
பல இடங்கள் சென்றாலும்
நிலையாய் என்னுள்
நிறைந்திருக்கும் வீடு இது!

வளர்ந்த வீட்டின்
வாசலில் நுழைகையில்
இனம்புரியா மகிழ்வு
என்றென்றும் என்னுள்!

நிழற் கடிகாரமாய்
நின்றிருந்த தூண்கள்!
துள்ளி விளையாடிய
தோட்டத்தின் பாதைகள்!
சிட்டுக் குருவியென
சிறகடிக்கும் எந்தன்மனம்!

எண்ணத்தைக் கவரும்
வண்ண மலரனைத்தும்

எங்கள் சொந்தமென
எப்போதும் வட்டமிடும்
வண்ணத்துப் பூச்சிகள்!

நாங்கள் மட்டுமல்ல!
தோட்டத்துப் பயிர்களும்
ஊட்டமாய் வளர
ஊற்றுநீரை உவந்தளித்த
தோட்டத்துக் கிணறு!

பெருமழைக்காலத்தில்
வறுத்த பயறு வகை
வாய் நிறைத்திருக்க
துப்பறியும் நாவல்களில்
தொலைந்து போன தருணங்கள்!

உறைவிடம் இன்னும்
மறைந்தவரின் பெருமைகளை
உரைக்கும் இடமாகவே
உணரச் செய்கிறது!
கடந்தகால நினைவுகளில்
கரைந்து போகச்செய்கிற்து!

எண்ணத்தில் நிறைந்து
எப்போதும் என்னை
புதுப்பித்துக் கொள்ளும்
புகலிடமாய்த் திகழ்கிறது!

-காரஞ்சன் (சேஷ்)

படங்கள்: காரஞ்சன்(சேஷ்)
எங்கள் வீட்டுத் தோட்ட மலர்கள்!

28 கருத்துகள்:

  1. அருமையான ஆக்கம்.

    //உறைவிடம் இன்னும்
    மறைந்தவரின் பெருமைகளை
    உரைக்கும் இடமாகவே
    உணரச் செய்கிறது!
    கடந்தகால நினைவுகளில்
    கரைந்து போகச்செய்கிற்து!//

    ஆம் உண்மை தான்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  3. உறைவிடம் இன்னும்
    மறைந்தவரின் பெருமைகளை
    உரைக்கும் இடமாகவே
    உணரச் செய்கிறது!
    கடந்தகால நினைவுகளில்
    கரைந்து போகச்செய்கிற்து!

    நினைவுகளும் படங்களும் மனதை நிறைத்தன,,பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  4. //எண்ணத்தில் நிறைந்து
    எப்போதும் என்னை
    புதுப்பித்துக் கொள்ளும்
    புகலிடமாய்த் திகழ்கிறது! //

    உண்மைதான். கவிதை முழுக்க பிறந்த வீட்டின் பெருமை. எலி வளை ஆனாலும் தனி வளை என்பது இன்னும் மகிழ்ச்சி!
    கவிஞர் காரஞ்சன் (சேஷ்) அவர்களுக்கு பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  5. பிறந்த வீடும்
    தவழ்ந்த வீடும்
    என்றென்றும்
    நீங்கா
    எண்ணங்களாய்
    நெங்சில் நிலைத்து
    நிற்கும். நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  6. “ ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள் ( http://2008rupan.wordpress.com/2013/11/13/ரூபனின்-தீபாவளிச்-சிறப்-2

    வரிசையில் தங்களுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது . மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

    2வது-சேஷாத்திரி(காரஞ்சன்/சே)
    கவிதைதலைப்பு-நாம் சிரிக்கும் நாளே திருநாள்
    வலைத்தளமுகவரி- http://esseshadri.blogspot.in/2013/10/blog-post_20.html

    பதிலளிநீக்கு
  7. மிக்க மகிழ்வளிக்கிறது ஐயா! தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி ஐயா! இத்தருணத்தில் இப்போட்டியை ஏற்பாடு செய்த திரு ரூபன் அவர்களுக்கும், நடுவர்கள் மூவருக்கும், திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! பங்குபெற்ற அனைத்து திறமைசாலிகளுக்கும் பாராட்டுகள்! பரிசு பெற்ற மற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  8. ஆழமான கருத்துடன் கூடிய
    அற்புதமான கவிதை
    மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. தங்களின் வருகை மகிழ்வளித்தது! தங்களின் வலைப்பூவில் பகிர்ந்த கவிதை என்னை மிகவும் கவர்ந்தது! தங்களைப் போன்றவர்களின் கருத்துரைகளும் வாழ்த்துகளும் மேலும் எழுதத் தூண் டும் என்பதில் ஐயமில்லை! மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  10. உங்கள் எண்னத்தில் இருந்து இனிதாய் மலர்ந்த கவிதை
    என் உள்ளமும் நிறைத்தது. மிக அருமை!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்
    ஐயா
    கவிதையை படித்த போது பிறந்து வளர்ந்த மண்ணின் நினைவுகள் எம்மை ஒருகனம் நினைத்துதுப்பார்க்க சொல்லுகிறது ஐயா.....புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் அன்னியவன் மண் நாம் பிறந்த வளர்ந்த மண்ணுக்கு ஈடாகுமா???? கவிதை அருமை வாழ்துக்கள் ஐயா

    -நன்றி-
    அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  13. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி! ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிச்சயம் இது போன்ற உணர்வுகள் நிறைந்திருக்கும்! தங்களின் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  14. Sir Very few will hold this type of life. you are blessed. fine. ramanans

    பதிலளிநீக்கு
  15. நீங்கா எண்ணம் அருமை
    தோட்டத்து மலரும் அருமை...
    வாழ்த்துக்கள்.
    வெற்றிக்கும் வாழ்த்துக்கள்..
    தொடரட்டும் வெற்றிகள்..

    பதிலளிநீக்கு
  16. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு