ஞாயிறு, 17 நவம்பர், 2013

தீபத்திருநாள் வாழ்த்து! -காரஞ்சன் (சேஷ்)
ஆகினாய் ஒளிவடிவாய்!
ஏகிஎன்  மனத்துள்ளே
என்னாளும் உறைபவனே!
அகலாத நினைவுடனே
அகல் விளக்கேற்றி வைத்தோம்!
அகல் விளக்கின் ஆவளியில்
அகலட்டும் இருளனைத்தும்!
புகலிடம் நின் பொற்பாதம்!
புகல்நாவே அவன்நாமம்!
இகல் வெல்லும்! இடரகற்றும்!
பாபங்கள் அகலட்டும்                                              
தீபஒளி தரிசனத்தில்!
                                                           -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

24 கருத்துகள்:

 1. அருமையான கவிதை! பாராட்டுகள்! தீபத்திருநாள் வாழ்த்துகள்! தொடர்க!

  பதிலளிநீக்கு
 2. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 3. தீபத்திருநாள் படமும் கவிதையும் அருமை! பகிர்ந்தமைக்கு நன்றி!
  -தக்ஷி

  பதிலளிநீக்கு
 4. அற்புதமான சிறப்புக் கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  ஐயா
  அருமையான கவிதை அழகான மொழிநடையில் உள்ளது தொடர எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

   நீக்கு
 6. கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 7. தப்பா நினைக்காதீங்கோ. நான் எப்பவும் இப்படித்தான் குற்றம் கண்டுபிடிப்பேன்.

  இவ்விருவர்களைக்கவனியுங்க‌

  //புகலிடம் நின் பொற்பாதம்!
  புகல்நாவே அவன்நாமம்!//

  முதல்வரியில் நின் பொற்பாதம் என்பது நீங்கள் இப்பாவின் மூலம் அர்ச்சனை செய்யும் இறைவனைக்குறிக்கிறதல்லவா? அதே சமயம் அடுத்தவரியில் 'அவன் நாமம்' என்பது இன்னொருவனைக்குறிக்கும்.

  'நின்' என்பது you.
  'அவன்' எனப்து he

  Within a poem, you are praying two different Gods. But that is not your intention.

  புகலிடம் நின் பொற்பாதம்
  புகல்நாவே நின்நாமம்"

  என்றிருந்தால் பிரச்சினையில்லை.

  மற்றபடி கவிதை நன்றாக செல்கிறது.

  பதிலளிநீக்கு
 8. கார்த்திகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. பாபங்கள் அகலட்டும்
  தீபஒளி தரிசனத்தில்!

  வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
 10. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! நன்றி!

  பதிலளிநீக்கு
 11. //அகல் விளக்கின் ஆவளியில்
  அகலட்டும் இருளனைத்தும்!//

  மிக அழகான பாடல் வரிகள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 12. ஒளியின்றி வாழ்வேது ?
  ஒளியிழந்த விழிகளில் பார்வை எது?

  புறத்தேஆதவன் ஒளியாய்
  இருந்து வாழ்விக்கின்றான்

  அகத்தே அவனே மாதவனாய்
  உள்ளிருந்து நம்மை இயக்குகின்றான்

  சோதிச் சுடராய் நின்றான் அன்று
  அண்ணாமலையாய் குளிர்ந்தான்

  உண்ணாமுலை அம்மனுடன்
  உலகத்து உயிர்களுக்கெல்லாம்
  அருள் பாலிக்கின்றான் இன்று.

  அதைஅனைவரும் அறிந்து
  உணர்ந்திடவே அமைந்ததோர் அற்புத
  விழா கார்த்திகை தீபம்.
  கொண்டாடி மகிழ்வோம்

  படமும் கவிதை வரிகளும் அருமை
  பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகாகச் சொன்னீர்கள்! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

   நீக்கு
 13. கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகள்.....

  சிறப்பான கவிதை.....

  பதிலளிநீக்கு
 14. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 15. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு