செவ்வாய், 23 செப்டம்பர், 2014

துவளாமல் துணிந்து செல்!-காரஞ்சன்(சேஷ்)


        
ஒவ்வொருவருக்குள்ளும்
ஒளிந்திருக்கும் ஒரு திறமை!
உன்னை நீ அறிந்தால்
உயர்வது நிச்சயமே!

தன் திறனைக் கண்டறிந்து
தருணத்தே வெளிப்படுத்த
உயர்வொடு பெரும்புகழும்
உண்டாகும் உலகினிலே!

குறையிலா மனிதர்கள்
குவலயத்தில் யாருமில்லை!
நிறைகளைக் காண்பவர்கள்
நிச்சயம் உயர்ந்தவர்தாம்!

உயர்வினைப் பெற்றிடவே
ஊக்குவித்தல் அவசியமே!
உறவொடு நட்பிற்கும்
உண்டதிலே பெரும்பங்கு!

நண்பர்களாய் நாமிருப்போம்!
நட்பினை வளர்த்திடுவோம்!
நல்லதோர் நட்பிற்கு

நானிலத்தில் மறைவில்லை!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி

11 கருத்துகள்:

 1. //நண்பர்களாய் நாமிருப்போம்!
  நட்பினை வளர்த்திடுவோம்!//

  நட்பினை நட்புடன் நன்றாக விளக்கும் இந்தக்கவிதை நன்றாக உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள். - VGK

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் மிகவும் ஊக்கமளிக்கிறது! நன்றி ஐயா!

   நீக்கு
 2. ///நண்பர்களாய் நாமிருப்போம்!
  நட்பினை வளர்த்திடுவோம்!
  நல்லதோர் நட்பிற்கு

  நானிலத்தில் மறைவில்லை!///
  உண்மை
  உண்மை
  அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
  2. குறையிலா மனிதர்கள்
   குவலயத்தில் யாருமில்லை!
   நிறைகளைக் காண்பவர்கள்
   நிச்சயம் உயர்ந்தவர்தாம்!

   குறை மறந்து நிறை நிறைந்து
   குறைவில்லா வாழ்வு பெறுவோம்.!

   நீக்கு
  3. தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி!

   நீக்கு
 3. அன்பின் காரஞ்சன் ( சேஷ் )

  அருமையான கவிதை

  நட்பினை வளர்த்திடுவோம்!
  நல்லதோர் நட்பிற்கு
  நானிலத்தில் மறைவில்லை

  நட்பினை வளர்க்க ஆவன செய்வோம்.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு