ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு நடத்தப்படும் கவிதைப்போட்டிக்கான ஓவியக்கவிதை! -காரஞ்சன்(சேஷ்) 

பூத்தமலர் காத்திருக்க!..
 

நெஞ்சத் திரையினிலே நிறைந்தவளின் ஓவியத்தைக்
கொஞ்சும் எழிலுடனே குறையின்றி வரைந்தாரோ?
பிறைநிலவோ புருவங்கள்! கருவண்டோ இருவிழிகள்!
அரும்பிடுதே புன்னகையும் அழகான பூவிதழில்!          
 
அலைபாயும் மனதுடனே கலையழகுச் சிலைஅவளும்
வலைவீசிச் சென்றவனின் வரவுக்குக் காத்திருப்போ?
நிலைவாசல்  படிமீது அடிவைத்து நிற்குமவள்
பலகவிகள் படைத்திடவே அடியெடுத்துக் கொடுக்கின்றாள்!
 
கொடியிடை தாங்கிடுதே கூடையிலே மலர்ச்சரங்கள்!
விடைதேடிக் காத்திருப்போ? விழிமலர்கள் பூத்திருப்போ?
கொடிமலரில் தேனருந்த கூப்பிட்டா வண்டு வரும்?
வடிவழகாய் மலரொன்று வண்டிற்காய் காத்திருப்போ?
 
நீங்காத நினைவுகளால் நெஞ்சம் நிறைத்தவனால்
தூங்காது இரவுகளில் துடித்திருப்ப தறியானோ?
எங்கும் அவனுருவே! எந்நாளும் அவன் நினைவே!
ஏங்கும் அவள்துயரை அன்னவனும் அறியானோ?
 
தென்றலே! தீந்தமிழே! தேன்நிலவே! நீங்களெலாம்
மங்கையவள் துயர்தனையே மன்னவனுக் குரைப்பீரா?
நங்கையை மணமுடித்து நல்லின்பம் நல்கிடவே
செங்கமலக் கண்ணனிடம் சென்றுரைக்க மாட்டீரோ?
 
புன்னகை அழகினிலே பொன்நகையும் தோற்குதிங்கே!
கன்னியை மணமுடிக்க காளையவன் தேதிசொன்னால்
அரும்பிய புன்னகையின் அர்த்தமதுபுரிந்துவிடும்!
நறுமண மலர்மஞ்சம் நாளுமின்பம் சேர்த்துவிடும்! 
-காரஞ்சன்(சேஷ்)

இரண்டாவது கவிதை இதோ:


 

30 கருத்துகள்:

 1. wow அழகிய கவிதை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  என் பக்கமும் போட்டி கவிதை காண வரலாமே.

  பதிலளிநீக்கு
 2. அருமையான கவிதை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  என் போட்டிக் கவிதைகளையும் காண வரலாமே.

  பதிலளிநீக்கு
 3. பலகவிகள் பிறந்திடவே வழி வகுத்து நிற்கின்றாள்......
  வாழ்த்துக்கள்.....

  பதிலளிநீக்கு
 4. அருமையான கவிதை அய்யா!
  வெற்றி பெற வாழ்த்துகின்றேன்!

  பதிலளிநீக்கு
 5. அன்பின் சேஷாத்ரி - கவிதை அருமை - வெற்றி பெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 6. கொடிமலரில் தேனருந்த கூப்பிட்டா வண்டு வரும்?வடிவழகாய் மலரொன்று வண்டிற்காய் காத்திருப்போ?

  பதிலளிநீக்கு
 7. அலைபாயும் மனதுடனே கலையழகுச் சிலைஅவளும்
  வலைவீசிச் சென்றவனின் வரவுக்குக் காத்திருப்போ?
  நிலைவாசல் படிமீது அடிவைத்து நிற்குமவள்
  பலகவிகள் படைத்திடவே அடியெடுத்துக் கொடுக்கின்றாள்!

  ஓவியத்தை ஒட்டிய வரிகள்! அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும், கருத்தும் மகிழ்வளிக்கிறது! மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 8. வணக்கம் !

  அன்புச் சகோதரரே நான் இன்று தான் தங்களின் தளத்திற்கு
  முதன் முறையாக வந்துள்ளேன் .சகோதரர் ரூபன் அன்பின்
  ஐயா யாழ்ப்பாவாணர் இவர்களின் தலைமையில் நிகழும்
  இந்தக் கவிதைப் போட்டியினால் எண்ணற்ற படைப்பாளிகள்
  அறிமுகமாவார்கள் என்பதற்கு இதுவே சான்று !

  தங்களின் கவிதை வரிகள் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன்
  வாழ்த்துக்கள் போட்டியிலும் தாங்கள் வெற்றி பெற வேண்டும் .
  இன்பத் தமிழோடு என்றென்றும் இணைந்திருப்போம் .இதோ
  என்னுடைய கவிதை வரிகளும் இங்கே தாங்களும் இதனைக் கண்டு
  ரசியுங்கள் .
  http://rupika-rupika.blogspot.com/2014/08/2014.html

  http://rupika-rupika.blogspot.com/2014/08/2014-2.html

  பதிலளிநீக்கு
 9. கவிதை சிறப்பாக உள்ளது. வெற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

 10. வணக்கம்!

  "நிலைவாசல் படிமீது அடிவைத்து நிற்குமவள்
  பலகவிகள் படைத்திடவே அடியெடுத்துக் கொடுக்கின்றாள்!"

  மனத்தைக் கவ்வும் அடிகள்! பாராட்டுக்கள்!

  நெஞ்சஅறைக்குள் நிறைந்தவளின் பேரழகைக்
  கொஞ்சும் தமிழில் குவித்துள்ளீர்! - வஞ்சியவள்
  சாய்ந்திருக்கும் வாயிலெனத் தாங்கி உடல்தழுவ
  வாய்த்திட வேண்டும் வரம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 11. பதில்கள்
  1. வலைச்சரத்தில் எனது வலைப்பூவை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி!

   நீக்கு
 12. அருமையான வர்ணனை. மிகவும் இரசித்தேன்.

  போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் !

  எனது போட்டிக் கவிதைகளுக்கான இணைப்பு

  போட்டிக் கவிதைகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும், கருத்தும் மகிழ்வளிக்கிறது! மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 13. வணக்கம்
  கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தங்களின் விபரங்களை அனுப்பிவைக்குமாறு தயவாக வேண்டிக்கொள்கிறேன். மேலும் விபரம் பார்வையிட இதோ முகவரி
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய ...: ரூபன்& யாழ்பாவாணன்  இணைந்து நடத்திய  உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில் போட்டியை வெற்றிகரமாக நடத்திய தங்களுக்கு என் பாராட்டுகள்! வெற்றி பெற்றது மகிழ்வளிக்கிறது! விவரங்கள் அனுப்பி வைக்கிறேன்! நடுவர்களுக்கும் நிர்வாகக் குழுவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

   நீக்கு
 14. அன்பின் சேஷாத்ரி

  அருமையான கவிதை

  புலவர் இராமானுசத்தின் மறுமொழியினை அப்படியே தருகிறேன்.


  அலைபாயும் மனதுடனே கலையழகுச் சிலைஅவளும்
  வலைவீசிச் சென்றவனின் வரவுக்குக் காத்திருப்போ?
  நிலைவாசல் படிமீது அடிவைத்து நிற்குமவள்
  பலகவிகள் படைத்திடவே அடியெடுத்துக் கொடுக்கின்றாள்!

  ஓவியத்தை ஒட்டிய வரிகள்! அருமை!

  தங்கள் கவிதையினைப் பற்றிய கருத்தினைக் கூற சொற்களே இல்லை

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு