ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு நடத்தப்படும் கவிதைப்போட்டிக்கான இரண்டாவது கவிதை! -காரஞ்சன்(சேஷ்)












மலருமுன்னே பறிப்பதற்கா ?! உலகோரே சிந்திப்பீர்!

நதியைப்  பெண்ணென்பார்!  நாட்டைப் பெண்ணென்பார்!
கருவில்  பெண்ணென்றால்  கலைத்திடஏன் முயல்கின்றார்?
ஆழ்துளைக் கிணறுகளை   அலட்சியமாய் விடுகின்றார்!
குழிக்குள்   பலியெனவே    குழந்தைகளே  வீழ்கின்றார்!


 பேருந்தின் ஓட்டைகளும் பெருந்தீ விபத்துகளும்
கருணையின்றி மழலைகளைக் காலனிடம் சேர்த்திடுதே!
வாங்கிய   கடன்தொகையை   வட்டி       வளர்த்துவிட
தாங்க முடியாதோர்   தற்கொலையாம்---  குழந்தையுடன்!

வறுமையின்  பிடியில்    வாழ்வோரின்  குழந்தைகளோ
சரிவிகித   உணவின்றி    சாகின்றார்    நோயாலே!
கள்ளக் காதலுக்கு  பிள்ளைகள் தடையெனவே
கொல்கின்றாள் பெற்றவளே! கொடுஞ்செயல் இதுவன்றோ?

பள்ளிக்குச்  செல்லும்   பெண்பிள்ளை   பலருக்கு
பாலியல் தொந்தரவு பண்பில்லா ஆசானால்!
 அறுபதைக் கடந்தாலும் அடங்காத காமத்தால்
சிறுமிகளைச் சீரழிக்கும் சிற்சில மிருகங்கள்!

கடத்தி முடமாக்கும் கருணையிலாக் கயவர்கள்
இடங்களைத் தேர்ந்தெடுத்து  விடுகின்றார் கையேந்த!
பணம்பறிக்கக் கடத்துகிறார்  பச்சிளம் குழந்தைகளை!
இணங்கிட வில்லையெனில் எடுக்கின்றார் இன்னுயிரை!

 ஒன்றுமறியாச் சிறுவர்களை ஒழிக்கின்றார் போராலே!
அன்றாடச் செய்திகளில் அவலங்கள் இவையெல்லாம்!
தனிமனிதன் ஒழுக்கத்தில் தவறாத நிலைகாண
இனியேனும் இயற்றிடுவோம் இதற்கான கடும்சட்டம்!





படங்கள் உதவி: கூகிளுக்கு நன்றி!
-காரஞ்சன்(சேஷ்) 

10 கருத்துகள்:

  1. அருமையான விழிப்புனர்வுக் கவிதை
    வெற்றி பெற வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  2. தனிமனிதன் ஒழுக்கத்தில் தவறாத நிலைகாண
    இனியேனும் இயற்றிடுவோம் இதற்கான கடும்சட்டம்!

    அழகாகச் சொன்னீர்கள் வெற்றி பெற வழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் சேஷாத்ரி - கவிதை அருமை கருத்து பரப்ப வேண்டிய கருத்து -

    தனிமனிதன் ஒழுக்கத்தில் தவறாத நிலைகாண
    இனியேனும் இயற்றிடுவோம் இதற்கான கடும்சட்டம்!

    யார் இயற்றுவது ? அரசு விழித்துக் கொள்ளுமா - பொறுத்திருந்து பார்ப்போம்

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  4. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  5. சமூக அவலங்களைச் சாடும் சுட்டெரிக்கும் தங்களின் கவிதை உரிய அங்கீகாரத்தை நிச்சயம் பெறும்.
    வாழ்த்துக்கள் கவிஞரே!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  6. கருத்தாழம் மிக்க கவிதை. பகிர்வினுக்கு நன்றிகள் சகோதரரே. போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு