வெள்ளி, 1 மே, 2015

மேதினியில் மேதினமே! -காரஞ்சன் (சேஷ்)மேதினியில் மேதினமே!

உழைப்போர்கள் உரிமைபெற
உருவான இத்தினத்தில்
வறுமை அகன்றிடவே
பெருகட்டும் தொழில்கள்பல!

பிறருழைப்பைச் சுரண்டி
பிழைப்பவர்கள் தம்செயலைப்
பிழையென உணரட்டும்
பெருமைமிகு இந்நாளில்!

ஏழை எளியோரின்
இன்னல்கள் மறையட்டும்!
பிழையா மழை வரவால் 
உழவெங்கும் தழைக்கட்டும்!

அனைவருக்கும் மேதின வாழ்த்துகள்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

10 கருத்துகள்:

 1. இனிய உழைப்பாளிகள் தின நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை மகிழ்வளித்தது! மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
  2. உழைப்போர் உலகில் துன்பத்தில் வாடுகின்றார்
   அவர்களை சுரண்டி கொழுக்கும் வாய்சொல் வீரர்கள்
   இன்பத்தில் திளைக்கின்றார்
   இந்நிலை என்று மாறுமோ?

   நீக்கு
  3. சரியாகச் சொன்னீர்கள் ஐயா! நிலைமாறும் என நம்புவோம்! நன்றி!..

   நீக்கு
 2. "ஏழை எளியோரின்
  இன்னல்கள் மறையட்டும்!
  பிழையா மழை வரவால்
  உழவெங்கும் தழைக்கட்டும்!" என்பதே
  இன்றைய தேவையும் கூட

  பதிலளிநீக்கு
 3. மே தின வாழ்த்துக்கள் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 4. அன்புடையீர்! வணக்கம்!
  இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (13/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  வலைச்சர இணைப்பு:
  http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  பதிலளிநீக்கு
 5. அன்புள்ள கவிஞர் காரஞ்சன் (சேஷ்) அவர்களுக்கு வணக்கம்! உங்கள் வாசகர்களில் நானும் ஒருவன். இடையில் சில மாதங்களாக கருத்துரை பரிமாற்றத்தில் தொடர்பு எல்லை அதிகமாக இருந்தாலும், உங்கள் பதிவுகளை தமிழ்மணத்தில் தொடர்ந்து வாசித்து வருபவன். இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்கள், தங்களின் வலைத்தளத்தினை இன்றைய (13.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

  வலைச்சர இணைப்பு இதோ:
  வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்
  http://blogintamil.blogspot.in/2015/06/13.html

  பதிலளிநீக்கு