குற்றமென்ன?
வளர்த்த மரமோ? வளர்ந்த மரமோ?
வளர்த்தவரோ? வளர்ந்தவரே!
மழைவேண்டி மரபலியா?
பிழைசெய்யும் பெரியவரே!
மரமிழைத்த குற்றமென்ன?
மரத்தின் மீதேறி
சிரச்சேதம் செய்கின்றீர்?
முள்ளெடுக்க முள்ளெடுப்பார்!
இங்கோர் மரத்துண்டே
வெட்டும் கத்திக்கும்
விளங்கிடுதே கைப்பிடியாய்!
விலக்கிடுவோம் இச்செயலை!
விளங்கிடுவோம் சிறப்புடனே!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி : கூகிளுக்கு நன்றி!
மரமிழைத்த குற்றமென்ன?
பதிலளிநீக்குமரத்தின் மீதேறி
சிரச்சேதம் செய்கின்றீர்?//
அது தானே மரம் என்ன குற்றம் செய்தது.
படத்திற்கு கவிதையா?
படம் கவிதைக்கு மிக பொறுத்தம்.
தங்களின் வருகைக்கு நன்றி!
நீக்குபடமும் கவிதையும் சிறப்பு! நன்றி!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி
நீக்குபடமும், வரிகளும் அருமை.
பதிலளிநீக்குதங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி!
நீக்குபடமும், வரிகளும் அருமை
பதிலளிநீக்குமரங்கள் ஏதும் தவறு செய்யவில்லை
அது மனம் மரத்துப்போன மனிதர்கள்
நடமாடும் மத்தியில் முளைத்து வளர்ந்ததுதான்
முளைத்ததும் அதன் தவறல்ல
காகம் பழத்தை தின்று அங்கு கொட்டையை போட்டதுதான்.
மரம் குறித்து என்னுடைய பதிவை காண http://nizhalnijam.blogspot.in/2009/03/blog-post_5055.htmlவேண்டுகிறேன்.(இணைப்பு )
தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி!
நீக்குகவலைபடாதீர்கள்
நீக்குமரங்கள் என்றுமே தியாகிகள்.
அவைகள் என்றுமே
தனக்கென்று வாழ்ந்ததில்லை.
தன்னிடம் உள்ள அனைத்தையும்
மற்றவர்களுக்கு தானாகவே
மனமுவந்து கொடுத்து விடுகின்றன.
இருப்பினும் பேராசை கொண்ட மனித இனம்
பொன் முட்டையிடும் வாத்தை
கொன்று தின்பதுபோல
தீட்டிட மரத்திலேயே குறி பார்க்கும்
கொடூர குணம் கொண்ட வக்கிர மிருகம்.
இதை பற்றியெல்லாம் மரங்கள்
கவலைப்படுவதில்லை.
அவைகள் உலகிற்கு தன்னை
தருவதிலேயே தொடர்ந்து
ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.
அவைகளை பார்த்து மனித இனம்
பாடம்கற்றுக்கொள்ள வேண்டும்.
உண்மைதான் ஐயா! நன்றி!
நீக்குபடமும் படத்திற்கான கவிதையும் அருமை... மரம் இழைத்த குற்றமென்ன? பதில் தான் தெரியவில்லை!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!
நீக்குவிலக்கிடுவோம் இச்செயலை!
பதிலளிநீக்குவிளங்கிடுவோம் சிறப்புடனே!
விளக்கமாய் விளக்கிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
கை விலங்கிடுவோம்
நீக்குமரத்தை வெட்டும் கைகளுக்கு
ஒருநாள் அந்நிலை வரலாம்!
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
பதிலளிநீக்குபுத்தாண்டில் இப்போதுதான எனது வருகை என கருதுகிறேன் ..
பதிலளிநீக்குகவிதைகளும் .. படங்களும் அருமை ...
மாதங்கள் ... நாட்கள் ....
தோறும் தொடரட்டும் கவிதை வரிகள் ....
தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே!
நீக்குவலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள்...
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.in/2013/02/2.html
தங்களின் வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி!
பதிலளிநீக்குமரங்கள் மனிதனுக்கு வரம் போன்றது.
பதிலளிநீக்குபதிவு நன்று.
வேதா. இலங்காதிலகம்.
தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி!
பதிலளிநீக்குகவிதைக்குப் பொருத்தமான படத்தை தேடிப் பிடித்து தந்து இருக்கிறீர்கள். நரபலி போல் ” மரபலி “ சொல்லாகம் புதுமை!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!
பதிலளிநீக்குsuperb
பதிலளிநீக்குanthuvan cuddalore
Thank you my dear friend.
நீக்கு//மரமிழைத்த குற்றமென்ன?
பதிலளிநீக்குமரத்தின் மீதேறி சிரச்சேதம் செய்கின்றீர்?//
இதனால் தானோ மரமண்டை என்கின்றனரோ இவர்களின் செயலை!
நல்லதொரு ஆக்கம். பாராட்டுக்கள்.
மர மண்டை
நீக்குஎன்று மரத்தை
ஏளனம் செய்யாதீர்
அனைத்தையும்
தான் வந்த உலகத்திற்கு தந்துவிட்டு,
தொடர்ந்து இவ்வுலகம் பயன்பெற
விதைகளையும்தந்துவிட்டுபோகும்
மரங்களை ஏளனம் செய்யாதீர்.
நன்றி கெட்ட மானிடம்
குழந்தையாய்
இருக்கும்போது தொட்டிலாகவும்,
வாழும்போது படுக்க கட்டிலாகவும்,
மேஜையாகவும்,உணவாகவும்,
கொளுத்தும் வெய்யிலில் நிழலாகவும்.
காலி பயல்கலான மனிதர்கள்
உட்கார நாற்காலியாக்வும்,
அவன் பிறரை மாற்றி சேர்த்த
பொருட்களை வைக்க அலமாரிகளாகவும்
அவன் இந்த உலகத்தை விட்டு போகும்போது
அவனுக்கு காலில்லா கட்டிலாகவும்.
அந்த பாவியை மேலுலகதிர்க்கு
அனுப்ப விறகாகவும் இன்னும்
கணக்கற்ற பயன்களைதந்து
பயன்படும் தியாகியாக விளங்கும்
மரத்தை மர மண்டை
என்று இனியும் கேலி செய்யாதீர்
என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.
வருகை தந்து கருத்துரைத்த திரு வைகோ அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!
நீக்குதங்களின் கருத்துரையை இரசித்தேன் ஐயா! வருகைக்கு நன்றி!
பதிலளிநீக்குgood lines
பதிலளிநீக்குanthuvan cuddalore
Thank You
நீக்குபசி வந்திட பத்தும் பறந்து போகும்...
பதிலளிநீக்குவயிற்றுப் பிழைப்பால் இந்த மரக்கிளையும் கூட...!!!
புகைப்படமே ஒரு கவிதை...! அருமை...!வாழ்த்துக்கள்...!!!
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
நீக்கு