சனி, 5 ஜனவரி, 2013

காலக் கணிதம்! -காரஞ்சன்(சேஷ்)


காலக் கணிதம்!

கடன் வாங்கிக் கழித்தல்
காலத்தின் கணக்கிலில்லை! 
 
உறுப்பினராய் உள்ளவரை
நாலாறு மணிநேரம்
நாள்தோறும் நம்கணக்கில்! 
 
உழைத்து உயர்பவர்கள்
போதாது காலமென்பார்! 
 
உழன்று தவிப்பவர்கள்
போதாத காலமென்பார்! 

பொழுதைக் கழிப்பவர்கள்
போகாதோ காலமென்பார்!

வெற்றியில் திளைப்பவரோ
காலம் என் கையிலென்பார்!

வெற்றிபெறத் துடிப்பவரோ
எதிர்காலம் எமதென்பார்!

காலமோ என்றுமே
காத்திருப்பதில்லை யாருக்கும்!
                                                         -காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

21 கருத்துகள்:

  1. நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தைப்பார்.ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை. ஆமா சரிதான்.

    பதிலளிநீக்கு
  2. // கடன் வாங்கிக் கழித்தல்
    காலத்தின் கணக்கிலில்லை! //
    காலத்தின் கணிதத்தை கணிக்க முயன்ற கவிதை.



    பதிலளிநீக்கு
  3. காலமோ என்றுமே
    காத்திருப்பதில்லை யாருக்கும்!//

    எல்லோருக்கும் பொதுவானது.அருமையான கவிதை வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. காலமோ என்றுமே
    காத்திருப்பதில்லை யாருக்கும்!//

    எல்லோருக்கும் எப்படியோ பொழுது ஓடுகிறது.
    யாருக்கும் காத்து இருப்பது இல்லை காலம்
    உண்மை.
    கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
  5. காலக்கணிதம் . . . .
    பாதை, பஞ்சு பறறிய கவிதையும் அருமை....

    பதிலளிநீக்கு
  6. நன்றி நண்பரே! தங்களின் தொடர் வருகை மகிழ்வளிக்கிறது!

    பதிலளிநீக்கு
  7. //காலமோ என்றுமே
    காத்திருப்பதில்லை யாருக்கும்!//

    நூற்றுக்கு நூறு உண்மை.... காலம் எதற்கும், எவருக்கும் காத்திருப்பதில்லை.

    சிறப்பான கவிதை நண்பரே. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. //காலமோ என்றுமே
    காத்திருப்பதில்லை யாருக்கும்!//

    காலத்திற்கு ஏற்ற கவிதை மிக அழகாக! ;)

    பதிலளிநீக்கு