புதன், 14 ஆகஸ்ட், 2013

ஏற்றிப் போற்று!-காரஞ்சன் (சேஷ்)

                                                               ஏற்றிப் போற்று!

எங்கும் நிறைந்தது சுதந்திரக் காற்று!
பெற்றுத் தந்தவர் பெருமையைப் போற்று!

வண்ணப் பறவைகள் வாழ்ந்திடும் கூடு!
வளரும் நம்முடை(ய)  தாய்த்திரு நாடு!

நம்முள் பிரிவுகள் நீர்மேல் கோடு!
நாட்டின் நலனில் ஒன்றாய்க் கூடு!

ஊழலும், பகைமையும் உயர்விற்குக் கேடு!
அகற்றிட பற்பல வழிகளைத் தேடு!

பெரியோர் காட்டிய அறவழி ஏற்று
 நாளும் நீயும் நற்கடன் ஆற்று!

தம்மின் இளையோர் நலம்பெறத் தேற்று!
நாட்டைக் காப்பவர்  நற்புகழ் சாற்று!

நாளைய பாரத நம்பிக்கைக் கீற்று!
நன்னாளில் கொடி ஏற்றிப் போற்று!
இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!


16 கருத்துகள்:

 1. தம்மின் இளையோர் நலம்பெறத் தேற்று!
  நாட்டைக் காப்பவர் நற்புகழ் சாற்று//
  நன்றாக சொன்னீர்கள்.

  இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 2. சுதந்திர தின சிறப்புக் கவிதை
  மிக மிக அருமை
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 4. நல்லதோர் படைப்பு. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 6. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்

  நம்முள் பிரிவுகள் நீர்மேல் கோடு!
  நாட்டின் நலனில் ஒன்றாய்க் கூடு!

  சுதந்திர தினக்கவிதை மிக நன்றாக உள்ளது,

  என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 8. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. சிறப்பான கவிதை.

  அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 10. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு