மழைக்கால இரவுகளில்...
ஓட்டு வீட்டிற்குள்
ஒற்றுமையாய் நாமிருக்க
வறுமை நம்முடனே
வசதியாய் வாழ்ந்தது!
ஓட்டைகள் வழியாக
உள்ளிறங்கும் மழைநீரோ
பாடும் பாத்திரமாய்
பாத்திரத்தை மாற்றிவைக்கும்!
கோணிகளை விரித்து
குளிராமல் படுத்திருந்தோம்!
நம்பிக்கைக் கீற்றெனவே
நாம் மி (இ)ன்னல் இரசித்திருந்தோம்!
ஓட்டுவீடு ஒட்டியவீடாயிற்று!
பெய்யும்மழை இரசிக்க
ஓட்டுவீட்டில் இருந்த
ஒட்டுதல் ஏனில்லை?
கண்ணீர் வழிந்து
காதோரம் நனைத்திருக்க
பாத்திரங்களை இரசிக்கும்
பாத்திரம் ஆனேன்நான்!
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!
/// பாத்திரங்களை இரசிக்கும் பாத்திரம் ///
பதிலளிநீக்குஅருமை ஐயா...
தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி ஐயா!
பதிலளிநீக்குஓட்டு வீட்டை ஒட்டிய கவிதை நாட்டு நடப்பை நம்முன் நிறுத்தியது! அருமையான கவிதை! தொடருங்கள்! நன்றி!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
பதிலளிநீக்குarumai..
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
நீக்குமிகவும் அருமையான படைப்பு.
பதிலளிநீக்கு//ஓட்டுவீடு ஒட்டியவீடாயிற்று!
பெய்யும்மழை இரசிக்க
ஓட்டுவீட்டில் இருந்த
ஒட்டுதல் ஏனில்லை?//
நான் இதை என் சொந்த வாழ்க்கையிலேயே, மிகவும் அனுபவித்துப் பார்த்துள்ளேன். அதனால் என்னை இது மிகவும் ரஸிக்கச் செய்தது.
//கோணிகளை விரித்து
குளிராமல் படுத்திருந்தோம்!
நம்பிக்கைக் கீற்றெனவே
நாம் மி (இ)ன்னல் இரசித்திருந்தோம்!//
உண்மை உண்மை உண்மை. இன்னல்களே அன்று மின்னல்களாய்.
பகிர்வுக்கு நன்றிகள்.
சிறு வயது நிகழ்வுகள் நம் நினைவுகளில் நீங்காத பதிவாகின்றன!அப்படி என்னுள் எழுந்த படைப்பு ஐயா இது! தங்கள் வாழ்வில் இதுபோன்ற நிகழ்வுகளை அனுபவித்துள்ளதால் உணர்ந்து ரஸிக்க முடிந்திருக்கிறது! தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா!
நீக்குபாத்திரங்களை இரசிக்கும் பாத்திரம் ....
பதிலளிநீக்குநன்று.
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!
நீக்குநெகிழ்வித்த கவிதை! நன்றி!
பதிலளிநீக்கு-தக்ஷி
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
பதிலளிநீக்குவீடென்ன செய்யும்?
பதிலளிநீக்குநம் மனம் என்னும் வீட்டின்
ஜன்னல் கதவுகளை அடைத்துவிட்டால் ?
மனக் கதவுகள் திறந்தால்
வீட்டினுள் தென்றல் வீச தொடங்கும்.
பாத்திரங்களும் பாத்திரமும்
சுவையான உவமை
கவிதை அருமை
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா!
பதிலளிநீக்குவறுமை நம்முடனே
பதிலளிநீக்குவசதியாய் வாழ்ந்தது
>>
வறுமைக்கும் ஒரு நாள் வறுமை வரும்.
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
பதிலளிநீக்குwhat a imagination i think you should have felt
பதிலளிநீக்குanthuvan cuddalore
THANK YOU MY DEAR FRIEND!
நீக்குஇளம் பிராயத்து நினைவுகளுக்கு ஈடேது? அருமை...
பதிலளிநீக்குவெற்றுக் கிண்ணங்களையும் ஜலதரங்கமாக மாற்றும் மழை...!
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!
பதிலளிநீக்குஓட்டுவீடு ஒட்டியவீடாயிற்று!
பதிலளிநீக்குபெய்யும்மழை இரசிக்க
ஓட்டுவீட்டில் இருந்த
ஒட்டுதல் ஏனில்லை?
கண்ணீர் வழிந்து
காதோரம் நனைத்திருக்க
பாத்திரங்களை இரசிக்கும்
பாத்திரம் ஆனேன்நான்!//
நெகிழ வைத்த கவிதை.
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
நீக்கு