புதன், 21 ஆகஸ்ட், 2013

ஓட்டு வீடு!- காரஞ்சன்(சேஷ்)



மழைக்கால இரவுகளில்...

ஓட்டு வீட்டிற்குள்
ஒற்றுமையாய் நாமிருக்க
வறுமை நம்முடனே
வசதியாய் வாழ்ந்தது!

ஓட்டைகள் வழியாக
உள்ளிறங்கும் மழைநீரோ
பாடும் பாத்திரமாய்
பாத்திரத்தை மாற்றிவைக்கும்!

கோணிகளை விரித்து
குளிராமல் படுத்திருந்தோம்!
நம்பிக்கைக் கீற்றெனவே
நாம் மி (இ)ன்னல் இரசித்திருந்தோம்!

ஓட்டுவீடு ஒட்டியவீடாயிற்று!
பெய்யும்மழை இரசிக்க
ஓட்டுவீட்டில் இருந்த
ஒட்டுதல் ஏனில்லை?

கண்ணீர் வழிந்து
காதோரம் நனைத்திருக்க
பாத்திரங்களை இரசிக்கும்
பாத்திரம் ஆனேன்நான்!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

22 கருத்துகள்:

  1. /// பாத்திரங்களை இரசிக்கும் பாத்திரம் ///

    அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வருகை மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  3. ஓட்டு வீட்டை ஒட்டிய கவிதை நாட்டு நடப்பை நம்முன் நிறுத்தியது! அருமையான கவிதை! தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  4. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  5. மிகவும் அருமையான படைப்பு.

    //ஓட்டுவீடு ஒட்டியவீடாயிற்று!
    பெய்யும்மழை இரசிக்க
    ஓட்டுவீட்டில் இருந்த
    ஒட்டுதல் ஏனில்லை?//

    நான் இதை என் சொந்த வாழ்க்கையிலேயே, மிகவும் அனுபவித்துப் பார்த்துள்ளேன். அதனால் என்னை இது மிகவும் ரஸிக்கச் செய்தது.

    //கோணிகளை விரித்து
    குளிராமல் படுத்திருந்தோம்!
    நம்பிக்கைக் கீற்றெனவே
    நாம் மி (இ)ன்னல் இரசித்திருந்தோம்!//

    உண்மை உண்மை உண்மை. இன்னல்களே அன்று மின்னல்களாய்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறு வயது நிகழ்வுகள் நம் நினைவுகளில் நீங்காத பதிவாகின்றன!அப்படி என்னுள் எழுந்த படைப்பு ஐயா இது! தங்கள் வாழ்வில் இதுபோன்ற நிகழ்வுகளை அனுபவித்துள்ளதால் உணர்ந்து ரஸிக்க முடிந்திருக்கிறது! தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா!

      நீக்கு
  6. பாத்திரங்களை இரசிக்கும் பாத்திரம் ....
    நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  7. நெகிழ்வித்த கவிதை! நன்றி!
    -தக்‌ஷி

    பதிலளிநீக்கு
  8. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  9. வீடென்ன செய்யும்?
    நம் மனம் என்னும் வீட்டின்
    ஜன்னல் கதவுகளை அடைத்துவிட்டால் ?

    மனக் கதவுகள் திறந்தால்
    வீட்டினுள் தென்றல் வீச தொடங்கும்.

    பாத்திரங்களும் பாத்திரமும்
    சுவையான உவமை

    கவிதை அருமை

    பதிலளிநீக்கு
  10. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  11. வறுமை நம்முடனே
    வசதியாய் வாழ்ந்தது
    >>
    வறுமைக்கும் ஒரு நாள் வறுமை வரும்.

    பதிலளிநீக்கு
  12. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  13. what a imagination i think you should have felt

    anthuvan cuddalore

    பதிலளிநீக்கு
  14. இளம் பிராயத்து நினைவுகளுக்கு ஈடேது? அருமை...
    வெற்றுக் கிண்ணங்களையும் ஜலதரங்கமாக மாற்றும் மழை...!

    பதிலளிநீக்கு
  15. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  16. ஓட்டுவீடு ஒட்டியவீடாயிற்று!
    பெய்யும்மழை இரசிக்க
    ஓட்டுவீட்டில் இருந்த
    ஒட்டுதல் ஏனில்லை?

    கண்ணீர் வழிந்து
    காதோரம் நனைத்திருக்க
    பாத்திரங்களை இரசிக்கும்
    பாத்திரம் ஆனேன்நான்!//

    நெகிழ வைத்த கவிதை.

    பதிலளிநீக்கு