ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

எட்டு! எட்டு!-காரஞ்சன்(சேஷ்)

                                                            
                                                                எட்டு! எட்டு!


                                          சிரித்த முகத்துடன்
                                          சிறார்கள் எட்டு!

                                         காண்பவர் மகிழ்வர்
                                         கவலையை விட்டு!

                                         எட்டுத் திக்கும்
                                         இவர்களின் இலக்கு!
                                    
                                         இலக்கை நோக்கி
                                         பறப்பதில் சிட்டு!
                                      
                                        பாதையின் கடினம்
                                        பாதங்கள் அறியும்!
                                     
                                        தாங்கிக் கடந்தவர்
                                        தடங்கள் பதியும்!
                                     
                                        துவளா மனத்திடம்
                                        தோல்வியும் துவளும்!
 
                                        வெற்றியின் படிகள்
                                        விரைவில் தெரியும்!
 
                                       களைப்பெனும் துயரம்-வெற்றிக்
                                       களிப்பில் மறையும்!

                                      நீங்கா நினைவென
                                      நெஞ்சில் பதியும்!

                                                 -காரஞ்சன்(சேஷ்)

படம் அனுப்பிய நண்பருக்கு நன்றி

18 கருத்துகள்:

 1. சிறப்பான படம்....

  உற்சாகம் தரும் கவிதை...

  இரண்டுமே ரசித்தேன் நண்பரே....

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. மிகமிக அருமை!
  காட்சியும் கவியும் அற்புதம்!

  வாழ்த்துக்கள் சகோ!

  பதிலளிநீக்கு
 3. காட்சியும் பாடலும் நல்லாயிருக்கு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. // பாதையின் கடினம்
  பாதங்கள் அறியும்!

  தாங்கிக் கடந்தவர்
  தடங்கள் பதியும்!//

  பாதை கடியது என்று பாதியில் நின்று விடாமல் தாங்கி கடந்து வெற்றி களிப்பில் மகிழட்டும் அந்த சிறுவர்கள். அழகான கவிதை படபொருத்தம் பிரமாதம்.

  பதிலளிநீக்கு
 5. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 6. எப்படி ஸார் இப்படி எல்லாம் . அருமை சார் . நன்றி

  பதிலளிநீக்கு
 7. அருமை அருமை
  வாய்விட்டு சபதமாய்ப் படித்து ரசித்தேன்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. துவளா மனத்திடம்
  தோல்வியும் துவளும்!

  அருமை ஐயா

  பதிலளிநீக்கு
 9. இலக்கினை எட்டு எட்டு என்பதுபோல் இவர்களது ஓட்டம்...தொடரட்டும்...

  பதிலளிநீக்கு