திங்கள், 13 ஜனவரி, 2014

பொங்கல் வாழ்த்து!- காரஞ்சன்(சேஷ்)

பொங்குக பொங்கல்! -காரஞ்சன்(சேஷ்)
 பொங்குக பொங்கல்!
ஏரெடுத்துப் போராடி
பாரின் பசிபோக்க
ஓயாமல் உழைக்கும்
உழவர்களின் திருநாள்!
 
தென்னகத்து உழவன்
தன்னகத்தே கொண்ட
நன்றியெனும் உணர்வை
நவிலும் நாள்-பொங்கல்!

 
கதிரால் கதிர் விளைக்கும்
கதிரவனின் கருணைக்கு
புத்தரிசிப் பொங்கலிட்டு
புகன்றிடுவான்- நன்றி!

மெழுகிய முற்றந்தனில்

மாவிலைத் தோரணங்கள்!
மாக்கோல ஓவியங்கள்!

செங்கற்கள் அடுப்பாக
செங்கரும்பு உடன் நிற்க
பொன்மஞ்சள் கழுத்தோடு
புதுப்பானை- பொங்கலிட!

பொங்கிவரும் பாலுடனே
புத்தரிசி பானைபுக
புதுவெல்லம் உடன்சேர
 
பொங்கி வரும் வேளை
"பொங்கலோ பொங்கல்!"என
மங்கல ஒலிஎழுப்பி
மகிழ்ந்திடுவீர் அனைவருமே!

மங்கலம் பொங்கியெங்கும்
மனைநலம் சிறக்கட்டும்!

உழவர்தம் வாழ்வு
ஒளிமயமாய்த் திகழட்டும்!
 
இனிவரும் நாளெல்லாம்
இன்பமாய் அமையட்டும்!
 
 
மண்ணின் வளம்பெருக்க
இந்நாளில் சூளுரைப்போம்!
 
செயற்கை உரம்மிகுந்தால்
சீர்கெடுமே விளைநிலங்கள்!
 
கூர்த்தமதி  நம்மாழ்வார்
கூறிய வழிபற்றி
இயற்கை உரமிடுவீர்!
வியத்தகு பயனடைவீர்!
 
பொங்குக பொங்கல்!  பொங்கலோ பொங்கல்!
 
அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
                
 
  -காரஞ்சன்(சேஷ்)
        படங்கள்: உதவிக்கு கூகிளுக்கு நன்றி                     

24 கருத்துகள்:

 1. செங்கற்கள் அடுப்பாக
  செங்கரும்பு உடன் நிற்க
  பொன்மஞ்சள் கழுத்தோடு
  புதுப்பானை- பொங்கலிட!

  பொங்கிவரும் பாலுடனே
  புத்தரிசி பானைபுக
  புதுவெல்லம் உடன்சேர
  இனிய பொங்கல் வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

   நீக்கு
 2. வணக்கம்
  ஐயா.

  கூர்த்தமதி நம்மாழ்வார்
  கூறிய வழிபற்றி
  இயற்கை உரமிடுவீர்!
  வியத்தகு பயனடைவீர்!

  பொங்கல் கவிதையில் நம்மாழ்வார் ஐயா அவர்களைப்பற்றி கூறியதும் சிறப்பு...அருமை வாழ்த்துக்கள்.ஐயா.
  படம் மிக அழகு...

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

   நீக்கு
 3. வணக்கம்
  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

   நீக்கு
 4. கவிதையும் படங்களும் அருமை. மகிழ்ச்சி. அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. நன்றி ஐயா! தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 6. கவிதை மிகவும் அருமை நண்பரே ! தங்களுக்கு எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!!

  பதிலளிநீக்கு
 7. நன்றி ஐயா! தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 8. சிறப்பானதொரு கவிதை. வாழ்த்துகள்.
  ------
  தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 9. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 10. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா! தங்களுக்கும் என் இனிய பொங்கல் திருநால் நல்வாழ்த்துக்கள்!

   நீக்கு
 11. கவிஞருக்கு எனது மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்!


  பதிலளிநீக்கு
 12. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. மண்ணின் வளம்பெருக்க
  இந்நாளில் சூளுரைப்போம்!

  செயற்கை உரம்மிகுந்தால்
  சீர்கெடுமே விளைநிலங்கள்!

  கூர்த்தமதி நம்மாழ்வார்
  கூறிய வழிபற்றி
  இயற்கை உரமிடுவீர்!
  வியத்தகு பயனடைவீர்!//

  உழவர் திருநாளுக்கு அருமையான செய்தி.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு