திங்கள், 6 ஜனவரி, 2014

ஓவியக்கவிதை- எழிலி சேஷாத்ரி


திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் பகிர்ந்த ஓவியத்திற்கு என் மனைவி எழுதிய கவிதை இது!இறையனார் கவிதையிலே
இடம்பெற்ற வண்டினமே!
கடிமலர்ச் சோலையிலே
காளையவன் வரவுக்காய்
காத்திருந்து பூத்தவிழி
காண வந்தீரோ?
 
பிரிவுத்துயர் போக்க
பரிவுடனே வருடலுடன்
நறுமண மலர்ச்சரத்தை
நங்கைக்கு அவன் சூட்ட
மலர்ந்த முகங்கண்டு
 மயங்கிச் சூழ்ந்தீரோ?
 
நாணித் தலைசாய்த்து
நங்கையவள் புன்னகைக்க
புன்னகையைப் பூவென்று
எண்ணி விட்டீரோ?
 
எத்தனையோ மலரிருக்க
என்னவளை ஏன்சூழ்ந்தீர்?
மதுவின் மயக்கத்தில்
ஏதும் செய்வீரோ
என்றவனும் விரட்டுகிறான்!

 வண்ண ஓவியத்தை
வார்த்தையில் உரைத்திட
எண்ணத்தில் எழுந்தவற்றை
எழுதிவிட்டேன் கவிதையிலே!
                        -          எழிலி சேஷாத்ரி        

கவிதையை ஏற்று அவர் வலைப்பக்கத்தில் வெளியிட்ட                          திரு. வெங்கட்நாகராஜ் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி!

20 கருத்துகள்:

 1. அருமை ஐயா... தங்களின் துணைவியாருக்கு வாழ்த்துக்கள் பல...

  பதிலளிநீக்கு
 2. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 3. அடடா.... துணைவியாரும் கவிஞரா ? வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன்! தங்களின் வாழ்த்திற்கு நன்றி!

   நீக்கு
 4. தங்களின் மனைவிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும்..

  பதிலளிநீக்கு
 5. தங்களின் வருகை மகிழ்வளித்தது! மனைவியிடம் பாராட்டுகளைத் தெரிவித்துவிட்டேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 6. என்னையா இது.... தம்பதிகள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு கவிதை.... இறையனார் என்று ஆரம்பிக்கும் போதே ... ஒவியத்துக்குள்... பழமைக்குள் அழைத்து செல்லப் படுகிறோம்.
  நன்று. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. உங்கள் மனைவிக்குப் பாராட்டுகள். என் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள அனுப்பியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. அழகான கவிதை. வாழ்த்துக்கள் உங்கள் மனைவிக்கு.
  இருவரும் கவிதை அழகாய் எழுதுகிறீர்கள்.
  மிக பொருத்தமான் கவிதை வடித்த எழிலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

 9. வணக்கம்!

  வண்டினைப் பார்த்து வடித்திட்ட சொல்லெல்லாம்
  கண்டினை ஒக்கும் கழம்ந்து

  பதிலளிநீக்கு
 10. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!

  பதிலளிநீக்கு