செவ்வாய், 31 டிசம்பர், 2013

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! - காரஞ்சன்(சேஷ்)

 
 

ஈற்றினிலே          ஈரேழை                      ஏந்திவரும்           புத்தாண்டில்
கற்கண்டாம்         நல்வாழ்த்தைக்      களிப்புடனே         நவில்கின்றேன்!

எல்லாத்                துறைகளிலும்           எம்நாடு                 சிறந்ததென்று
சொல்லும்           நிலையடைந்து         சோதனைகள்     விலகட்டும்!

இன்னலின்றி      மக்களெங்கும்           இன்புற்று              வாழ்ந்திடவே
இயற்கைச்           சீற்றங்கள்                   இல்லாமல்           விலகட்டும்!

பொல்லாத          நோய்களெலாம்       போக்கிடமின்றி    இனி
இல்லாமற்          போனதென                 எல்லோரும்          மகிழட்டும்!
 
கல்லாதோர்         இல்லையென          களிக்கின்ற           நிலையடைய
எல்லா                    முயற்சிகளும்          எம்நாட்டில்           பெருகட்டும்!
 
அன்புளம்             பெருகிவிட்டால்        அனாதை               யாருமில்லை!
வன்முறை          நீங்கிவிட்டால்            எங்கெங்கும்           இன்பநிலை!
 
இல்லத்தில்          துவங்கிடுதே              இதற்கான            முதல்நிலையும்!
வெள்ளை              உள்ளத்தில்                 விதைக்கும்         நற்சிந்தனைகள்
எல்லையிலாப்     பயனளிக்கும்!         என்றென்றும்       உயர்வளிக்கும்!
 
புத்தாண்டு           வாழ்த்துகளைப்          புகன்றிடும்          இந்நாளில்
நல்விதைகள்     ஊன்றிடுவோம்           நம்நாடு                 தழைத்தோங்க!
 
 
 
 
அனைவருக்கும்  என்  புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

                                                                                       -காரஞ்சன்(சேஷ்)

22 கருத்துகள்:

 1. கற்கண்டுபோல இனிக்கும் நல்லதொரு கவிதை. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. அன்புடையீர், வணக்கம்.

  தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 3. சிறப்பான கவிதை ஐயா...

  இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  ஐயா.

  சிறப்பான கவிதை... மனதை நெருடியது....வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.....இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும்.....
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துக்கு மிக்க நன்றி

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. இந்த வருடம் எந்த போட்டியில் வெல்லப் போகிறீர்கள்? வை கோபாலகிருஷ்ணன் அய்யாவும் போட்டியை நடத்துகிறார். சென்று பாருங்கள்! வென்று வாருங்கள்!
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்! வலையுலகில் தங்களது சேவை தொடரட்டும்!

  பதிலளிநீக்கு
 7. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளிக்கிறது! முயற்சி செய்கிறேன் ஐயா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா! நன்றி!

  பதிலளிநீக்கு
 8. அருமையான கவிதை அய்யா. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. புத்தாண்டு வாழ்த்துகளைப் புகன்றிடும் இந்நாளில்
  நல்விதைகள் ஊன்றிடுவோம் நம்நாடு தழைத்தோங்க!//
  அருமையான் கவிதை. உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

 11. வணக்கம்!

  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
  நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
  சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
  தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  01.01.2014

  பதிலளிநீக்கு
 12. இன்று எனது பக்கத்தில்......

  உங்கள் துணைவியின் கவிதை.....

  http://venkatnagaraj.blogspot.com/2014/01/9.html

  தங்கள் தகவலுக்காக.....

  பதிலளிநீக்கு