சனி, 21 டிசம்பர், 2013

ஓவியக்கவிதை- காரஞ்சன்(சேஷ்)





நண்பர் திரு.வெங்கட் நாகராஜ் அவர்களின் அழைப்பினை ஏற்று அவர் தம் வலைப்பூவில் பகிர்ந்த ஓவியத்திற்கான என்னுடைய கவிதை இது!. என் கவிதையை ஏற்று தன் வலைப்பக்கத்தில் கவிதை தொடர்பாக என்னைப்பற்றித் தந்த அறிமுகம்!


காரஞ்சன் சிந்தனைகள் எனும் வலைப்பூவில் எழுதிக் கொண்டிருக்கும் திரு சேஷாத்ரி புதுவையில் வசிப்பவர்.  இந்த கவிதை அழைப்பில் முதல் கவிதையை எழுதிய திரு இ.சே. இராமன் அவர்களின் உறவினர். இதுவரை நேரில் சந்தித்தது இல்லையென்றாலும் சில சமயங்களில் அலைபேசி மூலம் பேசியது உண்டு. சில படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கான கவிதைகளை அவ்வப்போது தனது பக்கத்தில் வெளியிடுவார். அத்தனையும் சிறப்பான பகிர்வுகள். 

அறிமுகத்தோடு பகிர்ந்த அவருக்கு எனது உளமார்ந்த நன்றி!

கவிதையைப் படியுங்கள்! கருத்தினைப் பதியுங்கள்!

கவிதை இதோ!

பொங்கிவரும் அன்புடனே
நங்கையவள் கூந்தலிலே
நறுமண மலர்ச்சரத்தை
நாயகன்தான் சூட்டிவிட 

எங்கிருந்து வந்தனவோ,
இத்தனை வண்டினங்கள்?
பூவிதழில் தேனருந்த
போட்டியாய் வந்தனவோ!

வலிமைமிகு கரத்தாலே
வண்டினத்தை அவன் விரட்ட,
நாணித் தலைசாய்க்கும்,
நங்கையவள் கண்ணிரண்டும்,
வண்டுகளாய் மாறி,
வாலிபனை மொய்ப்பதென்ன?

                          -காரஞ்சன்(சேஷ்)

30 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன்! மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  2. மலர் போன்றவர்கள் பெண்கள்
    அவர்களின் கூந்தலிலே
    மலர்களைக் கண்டதும்
    வண்டுகள் வேறுபாடு காண
    இயலாது இரண்டையுமே
    சுற்றுகின்றன போலும்

    வண்ண ஓவியமும்
    சொல்லோவியமும்
    அருமையோ அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதைக்கு தங்களின் கருத்துரை இன்னும் அழகு சேர்க்கிறது! வருகை தந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  3. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  4. //நங்கையவள் கண்ணிரண்டும்,
    வண்டுகளாய் மாறி,
    வாலிபனை மொய்ப்பதென்ன?//

    மிகவும் அழகான கற்பனை. ரஸித்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
  5. அருமை! நல்ல கவி நடை!
    வாழ்த்துக்க்கள்!

    பதிலளிநீக்கு
  6. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  7. வலிமைமிகு கரத்தாலே
    வண்டினத்தை அவன் விரட்ட,
    நாணித் தலைசாய்க்கும்,
    நங்கையவள் கண்ணிரண்டும்,
    வண்டுகளாய் மாறி,
    வாலிபனை மொய்ப்பதென்ன?//
    வெங்கட் நாகராஜ் அவர்கள் வலைத்தளத்தில் படித்து விட்டேன். படத்திற்கு ஏற்ற அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  9. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  10. அருமையான கவிதை.

    உங்கள் கவிதையை எனது பக்கத்தில் வெளியிடத் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  11. ஓவியக் காட்சியை உரைத்த விதம் அருமை! மதுவுண்ணும் வண்டானேன்! நன்றி! -தக்‌ஷி

    பதிலளிநீக்கு

  12. கி. பாரதிதாசன் கவிஞா்21 December 2013 23:31


    வணக்கம்!

    சீவிய பூங்குழலைச் செல்வன் சரிசெய்யும்
    ஓவியப் பாடல்!தேன் ஊற்று!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியக் கவிதைக்கு உரைத்த கருத்துரை சிந்தையில் நிறைந்தது! செப்புவன் நன்றி!

      நீக்கு
  13. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  14. கண்ணிரண்டும் வண்டுகளாய் மாறி அவனை மொய்க்கும்போது எப்படி விரட்டுவான் அவன்? அழகான கற்பனை!

    பதிலளிநீக்கு
  15. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  16. இது தான் "நச்சுனு நாலு வரி" யா?????

    பதிலளிநீக்கு
  17. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு