செவ்வாய், 15 ஜூலை, 2014

கயல்-விழி! -காரஞ்சன்(சேஷ்)கயல்-விழி!

விழிகளின் பிம்பங்கள்
விழுந்தனவோ கயலெனவே!
வியந்த மீன்களெலாம்
விரைந்தனவோ அதைக்காண!
நீந்திய வேகத்தில்
நின்பிம்பம் கலைந்திடவும்
ஏமாற்ற மனமின்றி
இறைத்தாயோ பொரிகளையே!

-காரஞ்சன்(சேஷ்)

பட உதவி: கூகிளுக்கு நன்றி!

11 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா

  குறுங்கவி கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
  த.ம2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. கோவில் குளத்துல உக்காந்து எழுதின கவிதையா!?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை இல்லை! கண்ணில் பட்ட ஓவியத்திற்கு எழுதிய கவிதை! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

   நீக்கு
 3. படமும் கவிதையும் அழகாக உள்ளன. பாராட்டுக்கள்.

  இந்தமாத ‘நம் உரத்த சிந்தனை’ இதழின் July 2014 Page: 66ல் தங்கள் மனைவி எழுதியுள்ள வெண்பா வெளியிடப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி. அவர்களுக்கும் என் வாழ்த்துகள். vgk

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ந்தேன்! நேற்றுதான் புத்தகம் கிடைத்தது. தகவலுக்கு மிக்க நன்றி ஐயா!

   நீக்கு
 4. ஆஹா! மிக அழகான கவிதை அதற்கேற்ற படமும் கூட!

  பதிலளிநீக்கு