இந்த ஒளிப்படத்திற்கு இரு கவிதைகள் எழுதியுள்ளேன்.
தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து செல்ல வேண்டுகிறேன்.
கவிதை-1
ஒன்றிய உள்ளங்கள்
ஒன்றாய் அருகருகே!
பற்பல நினைவுகளை
பார்வைகள் பரிமாற
விழிகளின் மொழிதனையே
விளக்க ஒருமொழி
எதற்கு?
அகத்தின் முகவுரையாய்
அரும்பிடுதோ புன்னகையும்!
கவிதை 2
நகையரும்பும் முகங்களிலே
நம்பிக்கை ஒளிக்கீற்று!
அகங்களின் நினைவுகளை
அவ்விருவர் விழிபேச
விழிமொழி அறிந்திடவே
விழையுதம்மா செம்மொழியும்!
அகத்தின் மகிழ்வாலே
முகத்தில் புன்னகையோ?
-காரஞ்சன்(சேஷ்)
பட உதவிக்கு நன்றி: நம் உரத்த சிந்தனை மாத இதழ்.
இரண்டுமே நன்றாகத்தான் எழுதியுள்ளீர்கள். போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇரண்டு கவிதைகளும் படமின்றியே படத்தை உணர்த்தக் கூடியவை . வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
நீக்குஒன்றிருக்க ஒன்று வந்தால்... எதை ரசிப்பது?...ரெண்டுமே நல்லாத்தான் இருக்கு!
பதிலளிநீக்குஇரு கவிதையும் அழகு! அருமையாக எழுதியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஇரண்டுமே அருமை ஐயா... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!
நீக்குஅன்பின் சேஷாத்ரி , இரு கவிதைகளூமே அருமைதான். இரு கண்களைப் போலவே தான் - இரண்டுமே சிறந்தவையே - ஒன்றுதான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் இரண்டாவது கவிதையைத் தேர்ந்தெடுக்கிறேன்.
பதிலளிநீக்குசிந்தனை ஒன்றே - மூலக் கருத்தும் ஒன்றே ! படமும் நன்று ‘’
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
தங்களின் வரவும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!
நீக்குEnakkum irandavathu kavithai innum sirappaga irupathaga thondrugirathu
பதிலளிநீக்குதங்களின் வரவும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி!
நீக்குஅன்பின் சேஷாத்ரி
பதிலளிநீக்குஅறிவது நலனே ! விழைவதும் அஃதே !
வலைச்சரம் பற்றி அறிந்திருக்கலாம்
வாரம் ஒரு முறை வலைச்சர ஆசிரியப் பொறுப்பில் ஒரு பதிவரை அமர்த்துவோம். வருகிற வாரங்களில் ஒரு வாரத்திற்கு - தங்களை ஆசிரியராக நியமிக்க விரும்புகிறோம்.
விதி முறைகள் - அப்பதிவர் இணக்கம் தெரிவித்த உடன் அனுப்புவோம்.
என்னுடைய மின்னஞ்சல் முகவரி : cheenakay@gmail.com
தங்களீன் மின்னஞ்சல் முகவரி தருக - தொடர்பு கொள்வோம்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
தங்களின் வருகை மகிழ்வளித்தது! தனி மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்! நன்றி ஐயா!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!
பதிலளிநீக்கு