வெள்ளி, 11 ஜூலை, 2014

ஒளிப்படக்கவிதை!-காரஞ்சன்(சேஷ்)
















இந்த ஒளிப்படத்திற்கு இரு கவிதைகள் எழுதியுள்ளேன். 

தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து செல்ல வேண்டுகிறேன்.

கவிதை-1
 
ஒன்றிய உள்ளங்கள்
ஒன்றாய் அருகருகே!
பற்பல நினைவுகளை
பார்வைகள் பரிமாற
விழிகளின் மொழிதனையே
விளக்க ஒருமொழி எதற்கு?
அகத்தின் முகவுரையாய்
அரும்பிடுதோ புன்னகையும்!

கவிதை 2

நகையரும்பும் முகங்களிலே
நம்பிக்கை ஒளிக்கீற்று!
அகங்களின் நினைவுகளை
அவ்விருவர் விழிபேச
விழிமொழி அறிந்திடவே
விழையுதம்மா செம்மொழியும்!
அகத்தின் மகிழ்வாலே
முகத்தில் புன்னகையோ?

                                                     -காரஞ்சன்(சேஷ்)
 
பட உதவிக்கு நன்றி: நம் உரத்த சிந்தனை மாத இதழ்.

14 கருத்துகள்:

  1. இரண்டுமே நன்றாகத்தான் எழுதியுள்ளீர்கள். போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. இரண்டு கவிதைகளும் படமின்றியே படத்தை உணர்த்தக் கூடியவை . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  3. ஒன்றிருக்க ஒன்று வந்தால்... எதை ரசிப்பது?...ரெண்டுமே நல்லாத்தான் இருக்கு!

    பதிலளிநீக்கு
  4. இரு கவிதையும் அழகு! அருமையாக எழுதியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. இரண்டுமே அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  6. அன்பின் சேஷாத்ரி , இரு கவிதைகளூமே அருமைதான். இரு கண்களைப் போலவே தான் - இரண்டுமே சிறந்தவையே - ஒன்றுதான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் இரண்டாவது கவிதையைத் தேர்ந்தெடுக்கிறேன்.


    சிந்தனை ஒன்றே - மூலக் கருத்தும் ஒன்றே ! படமும் நன்று ‘’

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா!

      நீக்கு
  7. Enakkum irandavathu kavithai innum sirappaga irupathaga thondrugirathu

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவும் கருத்துரையும் மகிழ்வளித்தது! நன்றி!

      நீக்கு
  8. அன்பின் சேஷாத்ரி

    அறிவது நலனே ! விழைவதும் அஃதே !

    வலைச்சரம் பற்றி அறிந்திருக்கலாம்

    வாரம் ஒரு முறை வலைச்சர ஆசிரியப் பொறுப்பில் ஒரு பதிவரை அமர்த்துவோம். வருகிற வாரங்களில் ஒரு வாரத்திற்கு - தங்களை ஆசிரியராக நியமிக்க விரும்புகிறோம்.

    விதி முறைகள் - அப்பதிவர் இணக்கம் தெரிவித்த உடன் அனுப்புவோம்.

    என்னுடைய மின்னஞ்சல் முகவரி : cheenakay@gmail.com

    தங்களீன் மின்னஞ்சல் முகவரி தருக - தொடர்பு கொள்வோம்

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  9. தங்களின் வருகை மகிழ்வளித்தது! தனி மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  10. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு