புதன், 14 ஜனவரி, 2015

"பொங்கலோ பொங்கல்!" -காரஞ்சன்(சேஷ்)

"பொங்கலோ பொங்கல்!"

நாட்டினில் பசிப்பிணியை
ஓட்டிட உழைப்பவர்கள்
கூடிக் களித்துக்
கொண்டாடும்  பொங்கல்!

உறுதுணையாய் நிற்கின்ற
கறவைக்கும் கதிருக்கும்
மறவாமல் நன்றிசொல்லி
மகிழும்நாள் பொங்கல்!

நோக்குங்கால் மகிழ்விக்கும்
மாக்கோலம் பூவோடு!
மணநாள் வரவிற்கு
கன்னியர்கள் கனவோடு!

விளைந்த செந்நெல்லால்
வீடெங்கும் புத்தரிசி!
மஞ்சள் கழுத்துடனே
பொங்கலிடப் புதுப்பானை!
  
செங்கரும்பின் சுவையுடனே
பொங்கட்டும் தைப்பொங்கல்!
எங்கெங்கும் மகிழ்வலைகள்
எந்நாளும் தங்கட்டும்!

உழைப்பின் பயன்பெற்று
உழவர்கள் உயரட்டும்!
தழைத்தோங்கி நம்நாடு
தரணியிலே உயரட்டும்!

பொங்கட்டும் நல்லன்பு !
தங்கட்டும் மகிழ்வலைகள்!
நகைதவழும் முகங்களொடு
பகையுணர்வு மறையட்டும்!

பொங்கலோ பொங்கலென
பொங்கிவரும் மகிழ்வோடு
மங்கலக் குரலெழுப்பி
மகிழ்ந்திடுவோம் இந்நாளில்!
                                               -காரஞ்சன்(சேஷ்)
படங்கள்:கூகிளுக்கு நன்றி!

14 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா!

   நீக்கு
 2. அருமையான கவிதை.

  இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! நன்றி நண்பரே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பரே!

   நீக்கு
 3. அன்பின் சேஷாத்ரி

  இனிய பொங்கல் வாழ்த்துகள்

  4 வரிகளீல் பத்தி பத்தியாக பொங்கல் வாழ்த்தினைக் கவிதையாக படைத்தது நன்று - அருமையான கவிதை

  பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்

  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா!

   நீக்கு
 4. அருமை! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! நன்றி ஐயா! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா!

   நீக்கு
 5. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! நன்றி!

   நீக்கு
 6. தை பிறந்தாச்சு
  உலகெங்கும் தமிழ் வாழ
  உலகெங்கும் தமிழர் உலாவி வர
  வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! நன்றி!

   நீக்கு
 7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்வளித்தது! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்! நன்றி!

   நீக்கு