வியாழன், 26 ஜனவரி, 2012

விழுந்ததும் எழுந்திரு!-காரஞ்சன் (சேஷ்)

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல
விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

வீழ்ச்சி என்பது
எழுச்சியின் தொடக்கமே!

சரித்திரம் சொல்லும்
சான்றுகள் உண்டு!

ஒவ்வொரு சுற்றிலும்
விழுந்ததும் எழுந்தே
காலம் காட்டும்
கடிகார முட்கள்!

வீழ்ந்தெழும் அருவியால்
விளைவது மின்சாரம்!

வீழ்ந்ததும் எழுந்திடும்
விரிகடல் அலையும்!

வீழ்ந்த வித்தும்
விளைந்தெழும் விருட்சமாய்!

குறுநடை பயில்கையில்
குழவிகள் விழுந்தெழும்!

இரவின் வீழ்ச்சி
எழுந்திடும் விடியலாய்!

மற்போர் புரிகையில்
வீழ்ந்தவர் விரைந்தெழ
வெற்றி கிட்டிடும்!

வலையைப் பின்ன
விழுந்து பலமுறை
எழுந்த சிலந்தியின்
வீழ்ச்சியும் எழுச்சியும்
வித்தாய் அமைந்தது
வீரன் புரூசுக்கே!

செவிவழி வீழ்ந்த
கருப்பொருள் இன்று
சிந்தையில் எழுந்தது
சிறிய கவிதையாய்!

எனவே மனிதா!
வீழ்த்தியோர் வியக்க
விரைந்தெழுந்திடுவாய்!

                                                    -காரஞ்சன்(சேஷ்)

15 கருத்துகள்:

  1. Shanmugasundaram wrote:

    "Success is not in never falling but in raising every time you fall. Fantastic poetry!"

    பதிலளிநீக்கு
  2. //வீழ்த்தியோர் வியக்க விரைந்தெழுந்திடுவாய்!//
    நன்று! நன்றி.

    பதிலளிநீக்கு
  3. 'தோல்வியே வெற்றிக்கு அறிகுறி' என்பதை அருமையான கவிதை மூலம் கூறியுள்ளீர்கள். பாராட்டுக்கள். நன்றி சார்!

    பதிலளிநீக்கு
  4. Fantastic Poem. Thanku u sir.
    Mugundan M

    பதிலளிநீக்கு
  5. vow what a lines u r a great man god bless u

    anthuvan cuddalore

    பதிலளிநீக்கு
  6. sir, u r bringing me to "kavithai-ulagam". sorry. ofcourse, i munch some urudu ghazals or sufi words. now its attracting to go thro' tamiz also. here one such from khalil gibran
    "but I look up high to see only the light
    And never look down to see my shadow
    This is wisdom which man must learn ...."
    ramanans

    பதிலளிநீக்கு
  7. அன்பின் காரஞ்சன் - கவிதை நன்று - வீழ்வதெல்லாம் எழுவதெற்கே என்ற கொள்கை நன்று. கடிகார முட்கள் - அருவி - கடலலை -விருட்ச வித்து - மழலை - மற்போர் - சிலந்தி - ம்ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  8. செவிவழி வீழ்ந்த
    கருப்பொருள் இன்று
    சிந்தையில் எழுந்தது
    சிறிய கவிதையாய்!//

    உங்கள் செவியில் வீழ்ந்த செய்தி அருமையான கவிதையாக எங்களுக்கு!

    பதிலளிநீக்கு
  9. வீழ்த்தியோர் வியக்க
    விரைந்தெழுந்திடுவாய்!


    தன்னம்பிக்கை தத்துவம் !

    பதிலளிநீக்கு